டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீ இந்துவா? இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்!

டெல்லியில் நடந்த கலவரத்தின் போது நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த செய்தியாளர் அரவிந்த் குணசேகரன் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடந்த கலவரத்தின் போது நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த செய்தியாளர் அரவிந்த் குணசேகரன் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தி சேகரிக்க சென்றவரை கலவர கும்பல் கொடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

Recommended Video

    Delhi CAA riot | Delhi Journalist's experience during CAA clashes

    டெல்லியில் நடக்கும் சிஏஏ கலவரம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சை தொடர்ந்து இந்த கலவரம் ஏற்பட்டது. டெல்லியில் நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் விடாமல் நடந்து வருகிறது.

    இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் 16 பேர் இஸ்லாமியர்கள். இந்த கலவரம் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

     விமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது? வெளியான புகைப்படம் விமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது? வெளியான புகைப்படம்

    செய்தியாளர்

    செய்தியாளர்

    இந்த நிலையில் டெல்லியில் நடந்த கலவரத்தின் போது நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த செய்தியாளர் அரவிந்த் குணசேகரன் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஆங்கில ஊடகமான என்டிடிவியில் பணியாற்றி வருகிறார். செய்தி சேகரிக்க சென்றவரை கலவர கும்பல் கொடுமையாக தாக்கி இருக்கிறார்கள். அரவிந்த் குணசேகர் முதலில் டெல்லியில் கர்வால் பகுதியில் செய்தி சேகரித்து இருக்கிறார்.

    செய்தி சேகரித்தார்

    செய்தி சேகரித்தார்

    இவர் தனது நண்பர் சவுரப் சுக்லா உடன் செய்தி சேகரித்துள்ளார். கர்வால் பகுதியில் செய்தி சேகரித்த அந்த குழு கோகுல் நகர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது மீத் நகர் பகுதியில் கலவரம் நடப்பதாக அவர்களுக்கு செய்தி வந்துள்ளது. இதனால் வேகமாக அவர்கள் மீத் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். மீத் நகர் பாலத்தில் அதிக அளவில் கலவர கும்பல் நின்று இருக்கிறது. இந்த கலவர கும்பல் அங்கிருக்கும் ஒரு கட்டிடத்தை இடிக்க முயற்சி செய்துள்ளனர்.

    வீடியோ எடுக்க முயற்சி

    வீடியோ எடுக்க முயற்சி

    அதை வீடியோ எடுக்க அரவிந்த் குணசேகரன் முயன்று இருக்கிறார். ஆனால் கலவரக்காரர்கள் அதை வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை. அரவிந்த் குணசேகரன் உடன் சவுரப் சுக்லா மற்றும் இன்னும் சிலர் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் ஒன்றாக உள்ளே சென்று பாலத்தில் இருந்து இறங்கி கலவரம் நடப்பதை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போதுதான் அங்கே கலவர கும்பலை சேர்ந்த ஒரு நபர் வந்தார்.

    மோசமாக தாக்குதல்

    மோசமாக தாக்குதல்

    அதன்பின் அவர் மற்றவர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார். அதன்பின் வரிசையாக 20+ பேர் அங்கே வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அரவிந்த் குணசேகரனை தாக்கி உள்ளனர். எதுவும் கேட்காமல் தாக்கி உள்ளனர். அதன்பின் நீ செய்தியாளரா? நீ ஏன் வீடியோ எடுக்கிறாய்? என்று கடுமையாக அவரை தாக்கிக் கொண்டே கேள்வி எழுப்பி உள்ளனர்.

    என்ன மதம்

    அதேபோல் உன்னுடைய மதம் என்ன.? நீ இந்துவா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்ள சிரமப்பட்ட அரவிந்த் குணசேகரன், நான் தமிழ்நாடு, எனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார். அதன்பின் நான் இந்தியன் என்று அரவிந்த் குணசேகரன் கூறியுள்ளார். இதையடுத்து அவரை மிக மோசமாக அந்த கும்பல் தாக்கி இருக்கிறது. அவரின் உடன் இருந்த சவுரவையும் தாக்கி உள்ளனர்.

    எப்படி விட்டனர்

    அதன்பின் சவுரவ் தன்னுடைய ஜாதி பெயரை சொன்னதும் அவரை விட்டு இருக்கிறார்கள். ஆனால் அரவிந்த் குணசேகர் தன்னுடைய மதத்தை சொல்லாததால் அவரை தொடர்ந்து தாக்கி உள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில் அவரின் பற்கள் உடைந்துள்ளது. கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வடிய வடிய அவர் கீழே கிடந்து இருக்கிறார். அவரின் தலையிலும் மோசமாக தாக்க முயன்றுள்ளனர்.

    வீடியோ இதுதான்

    இந்த கலவர கும்பல் மோசமாக தாக்கும் போது, போலீஸ் கலவர கும்பல் உடன் இருந்தனர், பைக்கில் அவர்கள் உடன் போலீசார் இருந்தனர். போலீசுக்கு முன்னிலையில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. போலீஸ் இதற்கு எதுவும் செய்யாமல் அப்படியே வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த நிலையில் அரவிந்த் குணசேகரன் தான் எடுத்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    இணையத்திலும் தாக்குதல் என்ன

    இந்த வீடியோவை எடுக்க சென்ற போதுதான் நாங்கள் தாக்கப்பட்டோம் என்று அரவிந்த் குணசேகரன் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை இணையத்தில் நேற்று பலர் மோசமான வார்த்தைகளில் திட்டி பிரச்சனை செய்துள்ளனர். அவர்களுக்கு எல்லாம் இவர் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று பதில் அளித்துள்ளார். டெல்லியில் நடக்கும் கலவரங்களை இப்படி பல செய்தியாளர்கள் பலர் தைரியமாக வெளி உலகிற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.

    English summary
    Delhi Violence: Journalist Arvind Gunasekar attacked by Mobs yesterday - video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X