டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கதான் இன்சார்ஜ்.. டெல்லியை கட்டுக்குள் கொண்டு வாங்க.. அஜித் தோவலை அனுப்பிய மோடி.. அடுத்து என்ன?

டெல்லியில் நடக்கும் கலவரங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடக்கும் கலவரங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

டெல்லியில் தற்போது சிஆர்பிஎப் களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில நிமிடங்களுக்கு முன் அங்கு பாராமிலிட்டரி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது.

இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் 17 பேர் இஸ்லாமியர்கள். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டார். டெல்லி கலவரம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்!நீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்!

நேற்று பார்வையிட்டார்

நேற்று பார்வையிட்டார்

இந்த நிலையில் டெல்லியில் கலவரம் நடந்த பகுதிகளை நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பார்வையிட்டார். மத்திய அரசின் சிறப்பு அழைப்பின் பெயரில் அஜித் தோவல் நேரடியாக சென்று கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். அவரின் வருகையை தொடர்ந்து டெல்லிக்குள் சிஆர்பிஐ, சிஐஎஸ்எப் படை வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் டெல்லி போலீசுடன் சேர்ந்து இன்று காலை கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அஜித் தோவல்,டெல்லி போலீஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெல்லி போலீஸ் சரியாக செயல்படவில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி கிடையாது. காக்கி உடை அணிந்து இருப்பவர்களை மக்கள் நம்ப வேண்டும். பல போலீசார் களமிறங்கி கடுமையாக உழைக்கிறார்கள். விரைவில் நிலைமை முழுமையாக கட்டுக்குள் வரும், என்று குறிப்பிட்டார் .

முழு அனுமதி

முழு அனுமதி

இந்த நிலையில் மத்திய அரசு அஜித் தோவலுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது என்கிறார்கள். டெல்லியில் இயல்பு நிலையை கொண்டு வரும் பணி இவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரின் ஆணைகளை டெல்லி போலீஸ் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் படைகளும் இவரின் ஆணையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது .

இன்று கமிட்டி மீட்டிங்

இன்று கமிட்டி மீட்டிங்

இந்த நிலையில் இன்று மாலை அஜித் தோவல் முக்கிய மீட்டிங் நடத்த உள்ளார். உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை அதிகாரிங்கள், சிஆர்பிஎப் வீரர்கள், போலீஸ் கமிஷ்னர், டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் ஆகியோருடன் இவர் ஆலோசனை செய்ய உள்ளார். டெல்லியில் செயல்படுத்த வேண்டிய ஆக்சன் பிளான் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.

ரிப்போர்ட் அளிப்பார்

ரிப்போர்ட் அளிப்பார்

அதேபோல் டெல்லி கலவரம் குறித்து இவர் நேரடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் ரிப்போர்ட் அளிக்க உள்ளார். இதனால் அவர் அமித் ஷா மற்றும் மோடியை இன்று இரவு சந்திக்க உள்ளார். அவர்களிடம் டெல்லி கலவரம் குறித்து அவர் ஆலோசனை செய்வார். அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கியமான உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று கூறுகிறார்கள்.

English summary
Delhi Violence: NSA Ajit Doval has been given the charge of bringing Riot under control
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X