டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 18 எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளது என்றும் இந்த வன்முறையில் தொடர்புடைய 106 பேரை இதுவரை கைது செய்துள்ளோம் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த பிப்வரி 24ம் தேதி முதல் இன்று வரை நடந்த மோதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்ட்டுள்ளன. வடகிழக்கு டெல்லி பகுதிகளில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Delhi violence: Police claim 18 FIRs and arrested 106 people so far in connection with the riots

டெல்லி போலீஸ் பிஆர்ஒ இந்த வன்முறை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர்கள் கூறுகையில், டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 18 எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளோம். இந்த வன்முறையில் தொடர்புடைய 106 பேரை இதுவரை கைது செய்துள்ளோம் என்றார்.

வெறுப்பு பேச்சுக்கள்.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்!வெறுப்பு பேச்சுக்கள்.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்!

ஆனால் செய்தியாளர்களின் எந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அவர் சொல்லவந்ததை மட்டும் சொல்லிவிட்டு சென்றார். அவர் போகும் போது கடைசியாக பிரஸ் மீட்டில், "வரும் நாட்களில் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

English summary
The Delhi Police today said it has filed 18 FIRs and arrested 106 people so far in connection with the riots that broke out in North East Delhi on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X