டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்!

டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் 6 முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

டெல்லியில் சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது.

இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக தொடர்ந்து அமைதி காத்து வந்த காங்கிரஸ் கட்சி இப்போதுதான் கருத்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ள இடைக்கால தலைவர் சோனியா காந்தி தற்போது பேட்டி அளித்துள்ளார்.

 சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம்... வண்ணாரப்பேட்டை வர அமைச்சர் நிலோபருக்கு என்ன தயக்கம்? சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம்... வண்ணாரப்பேட்டை வர அமைச்சர் நிலோபருக்கு என்ன தயக்கம்?

சோனியா பேட்டி

சோனியா பேட்டி

சோனியா காந்தி தனது பேட்டியில், டெல்லி வன்முறை கவலையளிக்கிறது, இது ஒரு அரசியல் சூழ்ச்சி. அரசியல் லாபத்திற்காக வேண்டும் என்றே பாஜக இப்படி செய்கிறது. டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. டெல்லி தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இதுபோன்ற சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்.இந்த கலவரம் காரணமாக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

காயம் எப்படி

காயம் எப்படி

அங்கு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். டெல்லி வன்முறை சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பொறுப்பு. அவர் இந்தியாவின் மிக மோசமான உள்துறை அமைச்சர் என்று நிரூபித்துள்ளார். அவர் இதற்கு நேரடி பொறுப்பு. தற்போது நடக்கும் விஷயங்களை பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

கெஜ்ரிவால் எப்படி

கெஜ்ரிவால் எப்படி

அரவிந்த் கெஜ்ரிவாலும் இதில் சரியாக செயல்படவில்லை. அவர் துரிதமாக செயல்பட வேண்டிய நேரத்தில் பொறுப்பற்று இருந்துள்ளார்.கலவரம் நடக்கும் பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் பாதுகாப்பு படையினரை குவிக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. அங்கு இருந்த போலீசார் கூட கலவரத்தை கட்டுப்படுத்தாமல் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

வெறுப்பு அரசியல்

வெறுப்பு அரசியல்

வெறுப்பு அரசியலின் வெளிப்பாடுதான் இந்த கலவரம். வெறுப்பு மற்றும் சூழ்ச்சி அரசியலை கைவிட வேண்டும். அரசின் மெத்தனப்போக்கைதான் இது காட்டுகிறது, என்றுள்ளார். பாஜக தலைவர்கள் எல்லோரும் இதில் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக சோனியா காந்தி 6 முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

சம்பவம் என்ன

சம்பவம் என்ன

அதில், சம்பவம் நடந்த அன்று உளவுத்துறை கொடுத்த தகவல் என்ன? .கலவரம் நடந்த போது உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்து கொண்டு இருந்தார்? கலவரத்தை கட்டுப்படுத்துவதில் போலீஸ் தோல்வி அடைந்தது எப்படி? கலவர பகுதிகளில் துணை ராணுவ படையினரை ஏன் அழைக்கவில்லை? கலவரம் பெரிதாகும் வரை போலீசார் ஏன் காத்திருந்துள்ளனர்.? போலீஸ் ஏன் துரிதமாக செயல்படவில்லை.? என்று ஆறு கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.

English summary
Delhi Violence: Union Minister Amit Shah has to resign now says Sonia Gandhi in Press meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X