டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க என்று கூறிய ஆன்ட்டி.. வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்

Google Oneindia Tamil News

டெல்லி: குட்டை ஆடை அணிந்திருக்கும் பெண்களை பலாத்காரம் செய்யுங்கள் என கூறிய நடுத்தர வயது பெண் ஒருவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஒரு உணவகத்துக்கு அரை குறை ஆடைகளுடன் சில பெண்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், அங்கிருந்த ஆண்களை அழைத்து இதுபோல் குட்டை ஆடை அணிந்து வரும் பெண்கள் நீங்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அதுபோல் அணிந்துள்ளனர்.

எனவே அவர்கள் பலாத்காரம் செய்ய தகுதியானவர்கள் என அந்த பெண் கூறியதை கேட்டு குட்டை ஆடை அணிந்து வந்த இளம் பெண்கள் ஷாக்காகி விடுகின்றனர். இவ்வாறு கூறிவிட்டு அந்த பெண் அங்கிருந்த ஷாப்பிங் சென்டருக்கு செல்கிறார்.

ஆண்களே இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க.. அதிர வைத்த ஆண்களே இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க.. அதிர வைத்த "ஆண்ட்டி"யின் பேச்சு!

வீடியோ

வீடியோ

அவர் பின்னாலேயே வீடியோ கேமராவை ஆன் செய்து விட்டு அந்த இளம் பெண்களும் செல்கின்றனர். அங்கு அந்த பெண்ணை மன்னிப்பு கோருமாறு கூறுகின்றனர்.

பலாத்கார மிரட்டல்கள்

பலாத்கார மிரட்டல்கள்

எனினும் அந்த பெண் மன்னிப்பு கேட்க மறுத்துவிடுகிறார். நேற்று முழுவதும் இந்த பெண் பேசிய விவகாரம்தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கே பலாத்கார மிரட்டல்களை மர்மநபர்கள் விடுத்தனர்.

பேஸ்புக்

பேஸ்புக்

அந்த பெண்ணின் கருத்துக்கு பலர் அசிங்கமான கமென்ட்டுகளை போட்டு நாறடித்தனர். இதையடுத்து அந்த பெண் பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறுகையில் நிபந்தனையில்லா மன்னிப்பை அனைத்து பெண்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய கருத்தில் உள்ள தவறையும் கடுமையையும் நான் உணர்கிறேன்.

வேதனை

வேதனை

என்னுடைய கண்ணோட்டம் பிற்போக்குத்தனமாகவும் பழமையானதாகவும் இருப்பதை விட பாதுகாப்பாகவும் முற்போக்காகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். பொதுவெளியில் எனது கருத்தை கூறியது குறித்து வேதனை அடைகிறேன்.

மீண்டும் மன்னிப்பு

மீண்டும் மன்னிப்பு

மனைவியாக, சகோதரியாக, தாயாக ஒரு பெண்ணாக பெண்களின் கண்ணியத்தை நான் எப்போதும் மதிக்கிறேன். எனவே எனது கருத்தால் பல பெண்கள் மனதால் பாதிக்கப்பட்டவைக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

English summary
Delhi woman has tendered an apology on Facebook. She writes, "I extend an unconditional apology to all the girls. In hind sight, I realise, I was harsh and incorrect in my statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X