டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகளைக் கடத்த முயற்சி.. தனியாக போராடிய பெண்.. "பே"ன்னு வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் தனது 4 வயது குழந்தையை வீட்டிலிருந்து இழுத்து கொண்டு வண்டியில் கடத்தி செல்ல முயன்ற கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு தனது குழந்தையை காப்பாற்றிய தைரிய பெண் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கிழக்கு டெல்லியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு வீட்டின் முன் மாலை 4 மணிக்கு வண்டியை நிறுத்தினர். அப்போது அங்கு வாசலில் ஒரு குழந்தையும் அவரது தாயும் இருந்தனர்.

அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த பைக் ஆசாமி, சிறிது தண்ணீர் தருமாறு கேட்டார். அப்போது தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற நேரத்தில் வெளியே இருந்த 4 வயது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார்.

கோவாக்சின் மருந்து மனிதர்களுக்கு சோதனை.. உங்களுக்கு விருப்பமா.. டெல்லி எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு கோவாக்சின் மருந்து மனிதர்களுக்கு சோதனை.. உங்களுக்கு விருப்பமா.. டெல்லி எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு

குழந்தை மீட்பு

குழந்தை மீட்பு

அப்போது குழந்தையின் சப்தம் கேட்டு அந்த பெண்ணும் பக்கத்து வீட்டுக்காரரும் ஓடி வந்தார்கள், குழந்தையை பைக்கில் பிடித்து அமரவைத்த அந்த நபர் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது சினிமா ஹீரோ போல் வந்த அந்த தாய் கடத்தல்காரர்களிடம் இருந்து தனது குழந்தையை சண்டையிட்டு மீட்டார்.

பைக்கை

பைக்கை

உடனே பக்கத்து வீட்டுக்காரர் அக்கம் பக்கத்தினரை அலர்ட் செய்தார். அப்போது குழந்தையை விட்டுவிட்டு தப்பினால் போதும் என அந்த பைக்கை எடுத்து கொண்டு ஒரு நபர் தப்ப முயன்றார். அப்போது அவ்வழியே நின்ற ஒருவர் தனது பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்தி அந்த நபர் தப்பாதவாறு தடுத்தார். எனினும் அவர் தப்பி விட்டார்.

தப்ப முயற்சி

தப்ப முயற்சி

பின்னர் குழந்தையை தூக்கிய நபர் தப்பி ஓடி வந்தார். அவரை அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் துரத்தி கொண்டு வந்தார். அப்போதும் அவரும் பைக்கை குறுக்கே நிறுத்திய நபரும் பிடிக்க முயன்றனர். எனினும் இருவரும் பைக்கை போட்டு விட்டு தப்பி விட்டனர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர்.

உறவினர்

உறவினர்

அப்போது அந்த பைக்கின் பதிவு எண் போலியானது என தெரியவந்தது. எனினும் அந்த பைக் யாருடையது என்பது குறித்த விசாரணையில் ஜகத்பூரியை சேர்ந்த தீராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்களை கூறினார். இந்த கடத்தலுக்கு பின்னால் குழந்தையின் உறவினர் உபேந்திரா என்பவர் இருப்பது தெரியவந்தது.

தந்தை மீது பொறாமை

குழந்தையின் தந்தை துணி வியாபாரி. அவரது வியாபாரத்தால் உபேந்திராவுக்கு பொறாமை ஏற்பட்டது. இதனால் குழந்தையை கடத்தி ரூபாய் 35 லட்சம் பணத்தை கறக்க முயன்று இந்த கடத்தலை அரங்கேற்றியதும், வரும் பணத்தில் ஒரு லட்சத்தை அந்த கடத்தல்காரர்களுக்கு தருவதாக கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீராஜை கைது செய்து மற்றொருவரையும், உபேந்திராவையும் தேடி வருகிறார்கள்.

கை கட்டி வேடிக்கை

கை கட்டி வேடிக்கை

இந்த வீடியோவில் அந்த வீரத்தாய் போராடி தனது மகளை மீட்டுள்ளார். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இந்த களேபரங்களை பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்.குறைந்தபட்சம் இந்த தாயுடன் போராடி தோற்று பின்னர் நடந்தே அதிலும் தனது வீட்டை கடந்து செல்லும் தப்பிய கடத்தல்காரனை பிடிக்கக் கூடி அந்த பக்கத்து வீட்டுக்காரர் முன்வரவில்லை. ஆனால் சட்டை போடாத ஒருத்தர் எங்கிருந்தோ ஓடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயல்கிறார். அது போல் இன்னொருவர் பைக்கை குறுக்கே நிற்க வைத்து முயற்சிக்கிறார். இப்படி உதவி செய்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்! என்னத்த செய்ய!

English summary
Delhi Woman fights with kidnappers to save her 4 years old daughter from them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X