• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அப்பாவுக்கு கொரோனா.. சிசிச்சைக்காக துடித்த மகள்.. அதற்குள்ளாகவே மரணமடைந்த பரிதாபம்!

|

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த தந்தையை அவர் உயிர் பிரிவதற்குள் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனையின் வாயிலில் இருந்தபடி டெல்லி அரசிடம் மன்றாடிய நிலையில் அந்த பெண்ணின் தந்தை இறந்துவிட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் மோசமான பாதிப்புகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ், சப்தர்ஜங், லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு வார்டுகளை அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் 68 வயது முதியவர். இவருக்கு கொரோனா இருந்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

சென்னையில் ஒரு மாதத்தில் கொரோனாவை விரட்ட மாஸ்கை வைத்து மாஸ் பிளான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி

காய்ச்சல்

காய்ச்சல்

இதையடுத்து அவரது மகள் தனது தந்தையை லோக்நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தனது தந்தைக்கு கொரோனா இருப்பதையும் அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதையும் கூறினார். ஆனால் இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

உதவி

உதவி

இதையடுத்து ட்விட்டரில் " எனது தந்தைக்கு அதிக காய்ச்சல், அவரை மருத்துவமனைக்கு மாற்ற விரும்புகிறோம். டெல்லியின் லோக்நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையின் வாயிலில் தந்தையுடன் நிற்கிறேன். உள்ளே அனுமதிக்கவில்லை, அவருக்கு மூச்சும் திணறுகிறது. மருத்துவ உதவி இல்லாவிட்டால் அவர் பிழைக்க மாட்டார், உதவி செய்யுங்கள் என டெல்லி அரசுக்கு காலை 8.05 மணிக்கு கோரியுள்ளார்.

ஒரு மணி நேரம்

ஒரு மணி நேரம்

எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு ட்வீட்டை அனுப்பினார், அதில் தனது தந்தை உயிரிழந்துவிட்டார். அரசு எங்களை காக்க தவறிவிட்டது என தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் ட்விட்டர்வாசிகளின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை கூறுகையில் அந்த நபருக்கு கடந்த 1ஆம் தேதி கங்காராம் மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ட்வீட்

ட்வீட்

இதையடுத்து அவரை வீட்டு கண்காணிப்பில் இருக்குமாறு மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு அந்த நபர் கொண்டு வரும் போது இறந்திருந்தார் என தெரிவித்தனர். தனது தந்தைக்கு கொரோனா என்றும் எந்த உதவிமையமும் உதவவில்லை என்றும் கெஜ்ரிவால், சிசோடியா, எம்எல்ஏ திலிப் பாண்டே ஆகியோருக்கு அந்த பெண் ட்வீட் செய்ததில் திலீப் மட்டுமே பதிலளித்தார்.

பாஜக

பாஜக

ஒரு பெண் உதவிக்காக பல ட்வீட்டுகளை அனுப்பியும் அதை கண்டுக் கொள்ளாமல் இன்று உயிர் போய்விட்டது என்றும் இதற்கு காரணம் கெஜ்ரிவாலின் அரசின் தவறு என்றும் பாஜக கடுமையாக விமர்சனம் செய்கிறது. ட்விட்டரிலும் டெல்லி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Delhi Woman pleads before father dies of Coronavirus, But the LokNayak Jai Prakash Narayan Hospital (LNJP) says he was brought dead.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more