டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவில் வேலையை காட்டுகிறது தொற்று.. எகிறும் டெல்டா வைரஸ்.. சீல் வைக்கப்பட்ட "இஜினா" நகரம்.. ஷாக்

சீனாவில் டெல்டா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மறுபடியும் தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.. அதிலும் சீனா மிரண்டு கிடக்கிறது.. இதையடுத்து, தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்களை செலுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    China-வில் மீண்டும் ஆட்டம் காட்டும் Coronavirus.. சீல் வைக்கப்படும் நகரங்கள்

    முதன்முதலில் கொரோனாவைரஸ் பரவல் சீனாவில் இருந்து ஆரம்பித்தாலும், கட்டுக்குள் கொண்டு வந்ததிலும் சீனாதான் முதன்மையாக இருந்தது.

    மற்ற நாடுகள்தான் திணறி கொண்டிருக்கின்றன.. சீனா தொற்றில் இருந்து விடுவித்து கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரமாகவே திணறியது.. உலகையே மிரட்டிய 2வது அலைகூட, சீனாவில் ஏற்படவில்லை.

    செம நியூஸ்.. தமிழகத்தில் தொடர்ந்து குறையும் ஆக்டிவ் கேஸ்கள்.. அடியோடு சரியும் கொரோனா! செம நியூஸ்.. தமிழகத்தில் தொடர்ந்து குறையும் ஆக்டிவ் கேஸ்கள்.. அடியோடு சரியும் கொரோனா!

    சீனா

    சீனா

    ஆனால், இப்போது அங்கு டெல்டா வகை வைரஸ் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவில் பரவ வாய்ப்புள்ளதாக வார்னிங் தரப்பட்டுள்ளது.. இதன்காரணமாக, டெல்டா வைரஸ் பரவல் மையமான இஜினா நகரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது... இதில், மங்கோலியா நாட்டை ஒட்டிய சீன கட்டுப்பாட்டில் உள்ள இஜினா நகரம் தான், டெல்டா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்கிறது.

    பாதிப்புகள்

    பாதிப்புகள்

    இந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனா முழுவதும் 150 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளன.. இதில் 3ல் 2 பங்கு பேருக்கு இஜினா பகுதியை சேர்ந்தவர்கள்... மேலும், கான்சு, நிங்சியா, பீஜிங், ஹூபெய், ஹூனான் ஆகிய 11 மாகாணங்களிலும் புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன... இது சீன அரசை நிலைகுலைய வைத்து வருகிறது.. உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

    நெகட்டிவ்

    நெகட்டிவ்

    இஜினா நகரில் மட்டும் 37,500 குடும்பங்கள் உள்ளன.. இவர்கள் யாரையும் மறு உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியேவரக்கூடாது என்றும் மீறினால் கடும் தண்டனை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல வெளியிடங்களில் இருந்தும் யாருமே இஜினா நகருக்கு செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.. தலைநகர் பீஜிங்கிலும் இதே நிலைமைதான்.. அங்கும் யாருமே நுழைய கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது... அப்படியே வந்தாலும் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கொண்ட வர உத்தரவிடப்பட்டுள்ளது..

    பீஜிங்

    பீஜிங்

    பீஜிங்-கின் சாங்பீங் மாவட்டத்தில் உள்ள ஹாங்ஃபுயுவான் அதிக ஆபத்துள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு முற்றிலும் மூடப்பட்டுள்ளது... அங்கு 23 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்... 20 ஆயிரத்திற்கு அதிகமான சுகாதார பணியாளர்கள், அந்நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அதோபோல போக்குவரத்துகளிலும் கெடுபிடிகள், விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.. இப்படி புதுபுது விதிகளை அமல்படுத்தி வருவதால், மக்கள் அங்கு கதிகலங்கி போயுள்ளனர்.

    பாதிப்பு

    பாதிப்பு

    ரஷ்ய நாட்டை பொறுத்தவரை மொத்த தொற்று பாதிப்பு 8,279,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 231,669 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.. 861,293 பேர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. இந்த நாட்டில் கடந்த ஞாயிற்று கிழமை ஒரே நாளில் 35,660 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 1,072 பேர் உயிரிழந்தன... இங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்றாலும், அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தீவிரமாகி வருகின்றன.. மாஸ்கோவில் மட்டும் வரும் 28-ம் தேதி முதலே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    COVID-19 to hit India again? Rising cases in China, Russia, UK worrying. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மறுபடியும் தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.. அதிலும் சீனா மிரண்டு கிடக்கிறது.. இதையடுத்து, தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்களை செலுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X