டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டி மானிடைஷேசன் திட்டத்தால் கிடைத்தது சைபர்தான்... புதிய புத்தகத்தில் மோடியை விளாசும் யஷ்வந்த் சின்கா

Google Oneindia Tamil News

டெல்லி : மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியோடு ஊழல்வாதிகளைப் பணக்காரர்களாகிவிட்டதாக பிரதமர் மோடியை, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா, பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன் பின்னர் தனது 2 ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்த யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் பாஜகவில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா " இந்தியா அன்மேட்: ஹவ் தி மோடி கவர்மென்ட் புரோக் தி இகானமி?" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மோடியின் கடந்த 4 ஆண்டுகால அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.

தனிப்பட்ட கோபம்

தனிப்பட்ட கோபம்

மோடியின் தவறான பொருளாதார கொள்கைகள் ஏற்பட்ட விளைவுகளைத்தான் அவ்வப்போது நான் கூறி வருகிறேன். எனக்கு எந்தவிதத்திலும் மோடி மீது தனிப்பட்ட கோபம் இல்லை. உண்மையிலேயே நான்தான் 2014-ம் ஆண்டு தேர்தல் வந்தபோது, பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தலாம் என்று முதன் முதலில் குரல் கொடுத்தேன்.

வாய்ப்பை தவறவிட்ட மோடி

வாய்ப்பை தவறவிட்ட மோடி

மோடியின் பொருளாதார கொள்கைகளான பணமதிப்பிழப்பு, வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி, மேக் இன் இந்தியா உள்ளிட்ட பொருளாதார கொள்கைகள், திட்டங்கள் குறித்துத்தான் விமர்சிக்கிறேன். நாட்டின் பொருளாதாரத்தை மிகஉயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு கிடைத்த வாய்ப்பை மோடி தவறவிட்டுவிட்டார்.

ஊழல்வாதிகள்

ஊழல்வாதிகள்

2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய பேரழிவு. அந்த நடவடிக்கை ஊழல்வாதிகளை பணக்காரர் களாக்கியது.

வெறும் பூஜ்யம்

வெறும் பூஜ்யம்

பணமதிப்பிழப்பு முடிவை சாதகமாகக் காட்டி உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி கூட பெற்றது. ஆனால், பணமதிப்பிழப்பின் நோக்கத்தையும், முடிவையும் பார்த்தால் அது வெறும் பூஜ்யம்தான்.

தூசுதட்டி புதிய பெயர்

தூசுதட்டி புதிய பெயர்

மேக் இன் இந்தியா திட்டம் மிகப்பெரியத் தோல்வி. 2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உற்பத்தி போட்டித்திறன் கவுன்சில் என்று உருவாக்கியது. அதை தூசுதட்டி புதிய பெயர்தான் மேக்இன்.

கனவு வேலை

கனவு வேலை

மோடி கூறிய வேலைவாய்ப்புகள் அனைத்தும் பக்கோடா விற்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், டீ விற்பவர்கள், செய்தித்தாள் விற்பவர்கள் ஆகியோர் பற்றித்தான். படித்த முடித்த இளைஞர்களுக்கான கனவு வேலையைக் குறிப்பிடவில்லை.

ரொம்ப தவறு

ரொம்ப தவறு

ஜிஎஸ்டி வரி என்பது சிறப்பான திட்டம் தான். பெரும்பாலான பொருட்களின் விலை குறைய இந்த வரி உதவியாக இருக்கும். இந்த வரி நடைமுறைக்கு வந்தால், வரி மீது வரிவிதிப்பது இருக்காது. ஆனால், மோடியும், அருண் ஜெட்லியும் ஆரம்பத்தில் இருந்தே அதை நடை முறைப்படுத்தியவிதம் ரொம்ப தவறு.

இவ்வாறு அந்த புத்தகத்தில் சின்ஹா தெரிவித்துள்ளார்.

English summary
The demonetization of high-denomination currency notes announced on November 8, 2016 was a “whimsical” decision and served no purpose of governance. “ Former minister yashwant sinha says in a book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X