டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு நாட்டையே நம்பி இருப்பது ஆபத்து...டென்மார்க் பிரதமரிடம் சீனாவுக்கு குட்டு வைத்த பிரதமர் மோடி!!

Google Oneindia Tamil News

டெல்லி: ''கொள்முதலுக்கு ஒரே நாட்டை நம்பி இருப்பது ஆபத்தானது என்பதை கொரோனா நமக்கு உணர்த்தி இருக்கிறது'' என்று டென்மார்க் பிரதமர் மெட்டி பிரெடரிக்சென்னிடம் பிரதமர் மோடி காணொளி மூலம் நடந்த உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்,

இந்தியா - டென்மார்க் உச்சி மாநாடு திங்கள் கிழமை இருநாட்டு பிரதமர்கள் மத்தியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி விமர்சனங்களை முன் வைத்தார்.

depending on one source for supply is risky PM Modi told to Denmark PM targeting China

தொடர்ந்து மோடி பேசுகையில், ''பொருட்களை கொள்முதல் செய்வதில் நாங்கள் வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். ஆஸ்திரேலியா, ஜப்பான் உடன் புதிய கொள்முதல் விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், டென்மார்க் உடனான உறவை புதுப்பிக்க பிரதமர் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். எல்லையில் இருதரப்பிலும் படைகளை வாபஸ் பெறுவது குறித்த பேச்சுவாரத்தை நடந்து வந்தாலும், குளிர்காலத்தில் எல்லையில் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் உருவாகலாம் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில்தான் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு டென்மார்க் முன் வந்துள்ளது.

புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி

கடந்த சில மாதங்களாக மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் டென்மார்க்கைச் சேர்ந்த எல்எம் வின்ட், ஹல்தோர் டாப்சூ, நோவோசைமிஸ் ஆகியவை நிறுவனங்களை அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

இத்துடன் இந்தியாவில் நடைபெறும் ஷிப்பிங் பணிகளில் டென்மார்க்கைச் சேர்ந்த மெர்ஸ்க் நிறுவனம் 19 சதவீத பணிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாய உற்பத்தி பொருட்களுக்கான குளிரூட்டும் கிடங்குகளை டான்ஃபோஸ் நிறுவனம் இந்தியாவில் நிறுவி வருகிறது.

English summary
depending on one source for supply is risky PM Modi told to Denmark PM targeting China
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X