டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது - தமிழகம், கேரளாவிற்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா மேற்கு வங்கம் கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Recommended Video

    Weather Update : வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி | Oneindia Tamil

    நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளது. மும்பையில் விடாது வெளுத்து வாங்கும் மழையால் நகரமே வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. கேரளா, தமிழ்நாட்டிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    Depression in Bay of Bengal; TamilNadu Kerala to receive heavy rains

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 39 செமீ மழை பதிவாகியுள்ளது.
    பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரினால் பவானி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடலில் நிலை கொண்டுள்ளதால் 6ஆம் தேதி வரை மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்,கொங்கன், கோவா பகுதிகளில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒர்க் பிரம் ஹோம் எதிரொலி.. கம்ப்யூட்டர் டேபிள், சேருக்கு செம கிராக்கி.. சூடுபிடிக்கும் விற்பனைஒர்க் பிரம் ஹோம் எதிரொலி.. கம்ப்யூட்டர் டேபிள், சேருக்கு செம கிராக்கி.. சூடுபிடிக்கும் விற்பனை

    மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் பெருகியுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    English summary
    India meteorological department imd on wednesday issued a cyclone alert after a depression in the bay of bengal intensified into deep depression.The depression is unlikely to turn into a typhoon. However, west winds could reach as high as 7.6 metres from sea level.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X