டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்லிமென்டுக்கு போனோமா.. வந்தோமா என இல்லாமல் தருமபுரி எம்பி செய்த காரியத்தை பாருங்க மக்களே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Dharmapuri MP SenthilKumar : தருமபுரி எம்பி செய்த காரியத்தை பாருங்க மக்களே!- வீடியோ

    டெல்லி: டெல்லியில் அரசுப் பள்ளிகளில் உள்ள நவீன கழிப்பறைகளை பார்வையிட அனுமதி கோரி தருமபுரி எம்பி செந்தில்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசினார்.

    தருமபுரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியில் போட்டியிட்டு எம்பியானவர் அன்புமணி ராமதாஸ். இவர் கடந்த 5 ஆண்டுகளில் தருமபுரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதே தொகுதியில் அன்புமணி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் முன்னிலை வகித்து வந்த அன்புமணி போக போக பின்னுக்கு தள்ளப்பட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.

    ஆக்கப்பூர்வம்

    ஆக்கப்பூர்வம்

    இதையடுத்து இரவு வரை இருவரும் மாறி மாறி முன்னணியில் இருப்பதும் பின்னுக்கு செல்வதுமாக இருந்தனர். இதே நிலை நீண்ட நேரம் நீடித்த நிலையில் செந்தில்குமார் வெற்றி பெற்றார். இவர் ஆரம்பத்திலிருந்து ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து வருகிறார்.

    எம்பியாக தேர்வு

    எம்பியாக தேர்வு

    முதல்முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து உங்களை பார்வைகளையும் கருத்துகளையும் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு செந்தில்குமார் தருமபுரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வைத்த பெயர் #Coffee_with_twitter_friends என பெயரிட்டிருந்தார்.

    கட்சி பேதமின்றி

    கட்சி பேதமின்றி

    இதையடுத்து தருமபுரி லோக்சபா எம்பியாக செந்தில் குமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியாக தருமபுரியை சேர்ந்த சந்திரசேகரும் மற்றொரு எம்பியாக அதிமுக கூட்டணி சார்பில் பாமக அன்புமணியும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதனால் தருமபுரி மக்களுக்கு 3 எம்பிக்கள் கிடைத்தது மகிழ்ச்சி என்றும் மூவரும் இணைந்து பணியாற்றி தருமபுரியில் வேலைவாய்ப்பின்மையையும், தண்ணீர் பிரச்சினையையும் ஒழிப்போம் என கட்சி பேதமின்றி செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

    மக்களவை உறுப்பினர்

    மக்களவை உறுப்பினர்

    அதுபோல் டெல்லியில் இயங்கும் நவீன பள்ளிகளின் கட்டமைப்புகளை தனது சொந்த தொகுதியில் அமைப்பது தொடர்பாக ஆலோசனைகளை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில் இன்று சந்தித்தார்.

    செந்தில்குமாருக்கு சபாஷ்

    தேர்தலில் வெற்றி பெற்றோமா, டெல்லிக்கு அடிக்கடி ஃபிளைட்டில் விசிட் அடித்தோமா, மாதமானால் சம்பளம் வாங்கினோமா என சில எம்பிக்களை போல் இல்லாமல் உண்மையில் தன்னை தேர்வு செய்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என முனைப்புடன் செயல்படும் செந்தில் குமாருக்கு சபாஷ் போடுங்கள் மக்களே.

    English summary
    Dharmapuri MP SenthilKumar meets Aravind Kejriwal to sought his permission to visit govt school toilets which they have successfully implemented to have an idea to implement in his Parliamentary constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X