டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் வெளியிட்டு வருகிறார்.

dharmendra kumar and alok vardhan appointed as TN assembly 2021 electoral observers

இதில், 88936 வாக்கு பதிவு மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலை ஒப்பிடும் பொழுது 34.73 சதவிகித வாக்கு பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் 44 தனித் தொகுதிகள், 2 பழங்குடியினர் தொகுதிகள் உள்ளன.

80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா

5 மாநிலங்களின் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு நேரம் 5 மாநிலங்களிலும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்படும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 30.8 லட்சம் ரூபாய் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

English summary
dharmendra kumar and alok vardhan appointed as TN assembly 2021 electoral observers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X