டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாரத் மாதா கீ ஜே சொல்ல தயார் என்றால் இந்தியாவில் வசிக்கலாம்.. தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: பாரத் மாதா கீ ஜே என சொல்ல தயாராக இருப்போர் இந்தியாவில் வசிக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

Dharmendra Pradhan says that only those who are ready to say Bharat Mata Ki Jai can live here

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. சில இடங்களில் வன்முறைக்கு பஞ்சமில்லை. இந்த நிலையில் இதுகுறித்து ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில் இந்திய விடுதலைக்காக பகத்சிங்கும் சுபாஷ் சந்திர போஸும் பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சாதாரணமாக சுற்றி வரும் வகையில் நம் நாட்டை தர்ம சத்திரமாக மாற்ற வேண்டுமா?

பாரத் மாதா கீ ஜே என சொல்ல தயாராக இருப்போர் மட்டுமே இங்கு வாழலாம் என தெரிவித்துள்ளார். போராட்டத்தை ஒடுக்கிய உ.பி. போலீஸ் அதிகாரி ஒருவர் விருப்பம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என முஸ்லீம்களை பார்த்து கூறியதை மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Minister Dharmendra Pradhan says that only those who are ready to say Bharat Mata Ki Jai can live here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X