டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாக் பைட்டிற்கு தயாரா.. ரபேல் ஜெட் பற்றி புட்டுபுட்டு வைத்த தோனி.. நம்ம தலயா இது? என்னமோ இருக்கு!

ரபேல் விமானம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி செய்த டிவிட்கள் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் விமானம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி செய்த டிவிட்கள் பெரிய வைரலாகி உள்ளது.

இன்று 5 ரபேல் விமானங்கள் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான விழா அம்பாலாவில் நடந்தது. ரபேல் விமானங்களை இந்திய ராணுவத்துடன் இணைக்கும் விழாவில் பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்டி மற்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் இந்த ரபேல் விமானம் வானத்தில் பறந்து அணிவகுப்பு நடத்தியது. 5 ரபேல் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பறந்து அணிவகுப்பு நடத்தியது. ரபேல் விமானங்கள் இந்தியா ராணுவத்தில் இணைக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் தோனி செய்த டிவிட் செய்துள்ளார்.

இரண்டு பக்கமும் ஜாகுவார், சுகோய்.. நடுவில் சீறி பாய்ந்த ரபேல்.. சீனாவிற்கு இந்தியா அனுப்பிய மெசேஜ்! இரண்டு பக்கமும் ஜாகுவார், சுகோய்.. நடுவில் சீறி பாய்ந்த ரபேல்.. சீனாவிற்கு இந்தியா அனுப்பிய மெசேஜ்!

தோனி டிவிட்

தோனி டிவிட்

ரபேல் விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டதை பார்த்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி ஏக குஷி ஆகியுள்ளார். பொதுவாக, தினசரி செய்திகள் குறித்து டிவிட் செய்யாத தோனி இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், உலகின் நிரூபிக்கப்பட்ட தலை சிறந்த 4.5 ஜெனரேஷன் போர் விமானங்கள் தற்போது உலகின் சிறந்த போர் விமானிகளான இந்திய போர் விமானிகளுக்கு கிடைத்து உள்ளது.

மரண மாஸ் சக்தி

மரண மாஸ் சக்தி

இந்திய போர் விமானிகளின் திறமை மற்றும் நம்மிடம் ஏற்கனவே இருக்கும் போர் விமானங்கள் காரணமாக இந்த ரபேல் விமானம் மரண மாஸ் சக்தியை பெற போகிறது. கோல்டன் ஏரோ என்று அழைக்கப்படும் 17வது படை பிரிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ரபேல் விமானம் மூலம் இந்திய விமானப்படை இன்னும் வலிமை அடைந்துள்ளது.

ஏவுகணை சோதனை

ஏவுகணை சோதனை

இந்திய விமானப்படையில் அதிக காலம் இருந்த மிராஜ் 2000 மற்றும் சுகோய் 30 எம்கேஐ போன்ற என்னுடைய பேவரைட் விமானங்களின் சாதனையை இது முறியடிக்கும் என்று நம்புகிறேன். அதேபோல் சூப்பர் சுகோய் விமானங்கள் வரும் வரை ரபேல் விமானம் மூலம் நமது பாய்ஸ் dogfight எனப்படும் விமான சண்டை செய்ய முடியும். மேலும் பிவிஆர் எனப்படும் ஏவுகணை வகைகளை சோதனைகளை செய்யவும் முடியும், என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏவுகணை தாக்குதல்

ஏவுகணை தாக்குதல்

dogfight என்பது போரின் போது எதிரி நாட்டு விமானங்களை வானத்திலேயே போர் விமானங்கள் துரத்தி செல்வது, சேஸ் செய்வது, சுற்றி வளைப்பது ஆகும். அதேபோல் பிவிஆர் என்பது Beyond-visual-range missile என்று குறிப்பிடப்படும் ஏவுகணை தாக்குதலை ஆகும். இதன் மூலம் 37 கிமீ தூரத்தில் இருக்கும் விமானங்களை கூட பறந்தபடி குறி வைத்து தாக்க முடியும். ரபேல் விமானங்களில் இந்த வகை ஏவுகணைகளை பயன்படுத்த முடியும்.

என்ன ஆர்வம்

என்ன ஆர்வம்

ரபேல் விமானம் மூலம் இந்த அசாத்திய சக்தியை இந்திய விமானப்படை பெற்றுள்ளது. இதை எல்லாம் ரிசர்ச் செய்து ஆர்வமாக தோனி தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். பாதுகாப்பு படையில் இருப்பதால் போர் வீரர்களை,பாய்ஸ் என்று நட்பாக தோனி அழைத்து இருக்கிறார். தோனி இந்திய ராணுவத்தின் டெரிட்டோரியல் பிரிவில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். கிரிக்கெட் குறித்து கூட தோனி இதற்கு முன் இவ்வளவு ஆர்வமாக பேசியது கிடையாது.

என்னமோ இருக்கு

என்னமோ இருக்கு

முன்னதாக தோனி ஓய்வு பெற்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்து நேரடியாக ராணுவத்தில் சேர வாய்ப்புள்ளது. முழு நேரமாக ராணுவத்தில் சேர வாய்ப்புள்ளது என்று கூறினார்கள்.தற்போது அதேபோல் தோனியும் இந்திய விமானப்படை குறித்தும், அதில் இருக்கும் நுணுக்குங்கள் குறித்தும் தோனி புட்டு புட்டு வைக்கிறார். இதனால் இந்த திடீர் டிவிட், அவரின் ராணுவ திட்டங்கள் குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

English summary
Farmer cricketer Dhoni's tweets on Rafale raises the eyes of IAF and many others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X