டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட இது தெரியாம போச்சே...ஓட்டளிப்பது இவ்வளோ ஈஸியா?

Google Oneindia Tamil News

டெல்லி : தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல எளிய வழிகளை அறிமுகம் செய்துள்ளது. தேர்தல்களில் வாதக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு பல முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Did you know how to cast your vote in easy way

வாக்காளர் அடையாள அட்டை இல்லை, முகவரி மாறி விட்டது, எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு உள்ளது என தெரியவில்லை இப்படி பல காரணங்களைக் கூறிக் கொண்டு பலர் தேர்தல் நாளன்று ஓட்டளிப்பது இல்லை. தேர்தலில் ஓட்டளிப்பதற்கு சிலர் ஆர்வம் காட்டாததால் எந்த தேர்தலிலும், இதுவரை இந்தியாவில் ஒரு தொகுதியில் கூட 100 சதவீதம் ஓட்டு பதிவானது இல்லை.

ஆனால் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை, ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி தேர்தல் ஆணையம் பலவழிகளிலும் முயன்று வருகிறது. இதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இருந்தும் மக்கள் அதை உணர்ந்ததாக தெரியவில்லை. இதனால் ஓட்டளிப்பதை எளிதாக்க சில திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் தொடர்பான தகவல்கள், வாக்காளர் விபரம், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட விபரங்களை அறிய வாக்காளர் தனது மொபைல் போனில், தனது மாவட்ட எஸ்டிடி கோட் எண்ணுடன், 1905 என்ற தேர்தல் ஆணையத்தின் இலவச சேவை எண்ணை தொடர்பு கொள்ளலாம். சேவை மைய ஊழியரிடம் நமது சந்தேகங்களை, கேள்விகளை பதிவு செய்தால் போதும் அதற்கான விளக்கம் மற்றும் பதிலை நாம் பெற முடியும்.

English summary
Election Commission has introduced many easy ways to cast our vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X