டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணியாரே.. சீஸ் சொல்லுங்கள்.. ஸ்மைல் பண்ணுங்க.. மம்தாவை கலாய்த்து டெல்லி முழுவதும் போஸ்டர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மம்தாவை கலாய்த்து டெல்லி முழுவதும் போஸ்டர்கள்!- வீடியோ

    டெல்லி: தீதி தயவு செய்து சிரியுங்கள், எங்கிருந்து ஜனநாயகம் என கேட்டு டெல்லி முழுவதும் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்றி வருகின்றனர். இதற்காக ஜனவரி 19-ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பொதுக் கூட்டம் நடத்தினார்.

    இதில் முன்னாள் பிரதமர் தேவகௌடா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தர்ணா

    தர்ணா

    இதைத் தொடர்ந்து சிபிஐயை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் மம்தா அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் தர்ணாவை மம்தா கைவிட்டார்.

    ராம்லீலா மைதானத்தில்..

    ராம்லீலா மைதானத்தில்..

    இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முன் தினம் டெல்லியில் நடத்தியிருந்தார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்களை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    கிண்டல்

    கிண்டல்

    இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இதற்காக அவர் கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். டெல்லி முழுவதும் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    தீதி

    தீதி

    போஸ்டரில் தீதி தயவு செய்து சிரியுங்கள். டெல்லிக்கு வரவேற்கிறோம். எங்கே ஜனநாயகம் உயிருடன் இருக்கிறது மற்றும் உதைபடுகிறது என ஜனநாயகத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பு அந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

    English summary
    As West Bengal chief minister Mamata Banerjee is in Delhi for AAP chief Arvind Kejriwal’s 'Remove Dictatorship, Save Democracy' rally, posters with tongue-in-cheek messages have cropped up at several places "welcoming" the TMC chief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X