டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸ் காவல் முடிந்தது.. 3 நாள் நீதிமன்றக் காவல் விதித்த டெல்லி கோர்ட்.. மீண்டும் சிறையில் திஷா ரவி

Google Oneindia Tamil News

டெல்லி: சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கிரெட்டா தன்பெர்க் பதிவு செய்த டூல்கிட்டை பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி எடிட் செய்து பரப்பியதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டுகிறது.

Disha Ravi sent to three-day judicial custody by Delhis Patiala House Court

இதுதொடர்பாக திஷா ரவியை கைது செய்த காவல்துறையினர் டெல்லி அழைத்துச் சென்றனர். முதல்கட்டமாக அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று அவரது போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது நீதிமன்றம்.

நிருபர்களிடம் 'சோர்ஸ்' கேட்க முடியாது ஓகே.. ஆனால் பொறுப்போடு செயல்படுங்கள்.. டெல்லி ஹைகோர்ட் அட்வைஸ்நிருபர்களிடம் 'சோர்ஸ்' கேட்க முடியாது ஓகே.. ஆனால் பொறுப்போடு செயல்படுங்கள்.. டெல்லி ஹைகோர்ட் அட்வைஸ்

தேசத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் பிரிவுகளின் கீழ், திஷா ரவிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Disha Ravi has been sent to 3 days judicial custody after 5 days police custody over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X