டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயதசமி பண்டிகைக்கு முன்பே தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விஜயதசமி பண்டிகைக்கு முன்பே தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Diwali bonus: Union Cabinet approves bonus for central government employees

தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வர இருக்கும் சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்

மத்திய அரசுக்கு இந்த போனஸ் காரணமாக கூடுதலாக 3737 கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்தப் பணத்தை மாதம் ரூ.1,000 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

Diwali bonus: Union Cabinet approves bonus for central government employees

இந்த நிலையில் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விஜயதசமி பண்டிகைக்கு முன்பே தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நவராத்திரி, தீபாவளி, தை திருநாள், மகரசங்கராந்தி என பண்டிகைகள் வரிசையாக நிற்கின்றன. ஏழை நடுத்தர மக்களுக்கு நாடு முழுவதும் ரேசனில் இலவச அரிசியும், கோதுமையும் மட்டும்தான் வழங்கப்படுகிறது. ஏழை நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டு பண்டிகை எல்லாம் கொண்டாட்டங்கள் இன்றி சாதாரண நாளாகவே கடந்து விடும்.

English summary
A cabinet meeting chaired by Prime Minister Narendra Modi has decided to give Deepawali bonuses to 30.67 lakh central government employees. Union Minister Prakash Javdekar has said that the Diwali bonus will be given before the Vijayadasami festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X