டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழே மூத்த மொழி...லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா மீது தமிழக எம்.பி.க்கள் ஆவேச பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் மசோதா மீது பேசிய தமிழக எம்.பி.க்கள், தமிழே மூத்த மொழி என ஆவேசமாக பேசினர்.

லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக்கழகங்களுக்கு மத்திய பல்கலைக் கழக அந்தஸ்து அளிப்பது தொடர்பான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்து பேசுகையில், சமஸ்கிருதம் நாட்டின் தொன்மையான மொழி. அது, விஞ்ஞான மொழியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார்.

இதற்கு தமிழக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதா மீது திமுக எம்.பி. ஆ. ராசா பேசியதாவது:

திராவிட பண்பாடு

திராவிட பண்பாடு

இந்தியாவில் திராவிட பண்பாடு, ஆரிய பண்பாடு என இரண்டு சிந்தனைகள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கும், சம்ஸ்கிருத மொழிக்கும் சிறப்பு இயல்புகள் உள்ளன.

தமிழ் மொழி தொன்மையானது

தமிழ் மொழி தொன்மையானது

ஆனால் எந்த மொழியும் வேறு மொழி மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. நாங்கள் வட மொழிகளை எதிர்க்கவில்லை. சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் வரவில்லை. திராவிட மொழிகளில் தமிழ் 4,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிக்கது. ஆனால், சமஸ்கிருதம் 2,500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது.

சமஸ்கிருதம் மூலம் அறிவியல் கல்வியா?

சமஸ்கிருதம் மூலம் அறிவியல் கல்வியா?

இந்த சபையில் பா.ஜ.க எம்.பி.க்கள் சமஸ்கிருதத்தின் மூலம் அறிவியல் கல்வி குறித்து பேசப்பட்டு வருவது வியப்பளிக்கிறது. சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கும் மறைமுக எண்ணம் இதனை வெளிப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு குறைவு

நிதி ஒதுக்கீடு குறைவு

இன்று சமஸ்கிருதம் அழிந்து வருகிறது. அதனை ஊக்கப்படுத்துவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டு பிற மொழிகளுக்கு வெறும் 12 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு ஆ. ராசா பேசினார்.

மதுரையில் மத்திய தமிழ் பல்கலை. கழகம்

மதுரையில் மத்திய தமிழ் பல்கலை. கழகம்

இதேபோல் இடதுசாரி எம்.பிக்கள் வெங்கடேசன், திருப்பூர் சுப்பராயன் உள்ளிட்டோரும் சமஸ்கிருதத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் பேசுகையில், மதுரையில் மத்திய தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விவாதத்தின் போது பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

English summary
In Loksabha, Members of the BJP and the DMK engaged in a war of words on whether Sanskrit is a superior language or Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X