டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதார மந்தநிலை.. ஐ.டி துறையில் வேலை இழப்பு.. நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு திமுக நோட்டீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதார மந்தநிலை மற்றும் ஐ.டி துறையில் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம் செய்யப்படுவது' குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக வழங்கியுள்ளது.

நாட்டில் பொருளாதார மந்த நிலை மோசமாக உள்ளது. பலதுறைகளில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தியாவின் ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது.

DMK given Adjournment Motion Notice in Lok Sabha over economic recession and unprecedented job losses in IT sector

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபியில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

இது ஒருபுறம் எனில் ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலை நிச்சயம் இல்லை என்கிற நிலை தற்போது நீடிக்கிறது. கான்ங்னிசன்ட், இன்போசிஸ் உள்பட பல்வேறு ஐடி நிறுவனங்கள் பணியில் இருந்து திடீரென நீக்கி வருகிறது.

இந்நிலையில் 'பொருளாதார மந்தநிலை மற்றும் ஐ.டி துறையில் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம் செய்யப்படுவது' குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக வழங்கியுள்ளது. இதை ஏற்று சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Dravida Munnetra Kazhagam has given Adjournment Motion Notice in Lok Sabha over 'economic recession and unprecedented job losses in IT sector'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X