டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்க பெரியார் என கோஷமிட்ட கனிமொழி.. பதிலுக்கு பாஜக எம்பிக்கள் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் வாழ்க! தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு- வீடியோ

    டெல்லி: லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்கள் இன்று தமிழ் மொழியில் பதவியேற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் கனிமொழி பதவியேற்ற போது வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என கூறினார். இதற்கு பதிலடியாக பாஜக எம்பிக்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 38 இடங்களில் வெற்றி பெற்று எம்பிக்களாகி உள்ளனர். ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

    எனினும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகம் தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்று முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து அன்றே அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றது.

    தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர் தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்

    லோக்சபா கூட்டத்தொடர்

    லோக்சபா கூட்டத்தொடர்

    இந்நிலையில் புதிய 17-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது வருகிறது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி உள்பட பலர் பதவியேற்றுக் கொண்டனர்.

    அதிமுக எம்பியும் தமிழில்

    அதிமுக எம்பியும் தமிழில்

    இன்று லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் தமிழ் மொழியில் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தைச் சேந்த திமுக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தாய்மொழியான தமிழ்மொழியிலேயே பதவியேற்றனர். அதிமுக எம்பியான ரவீந்திரநாத்தும் தமிழியே பதவியேற்றார்.

    ஜெய் ஸ்ரீராம் என பாஜக கோஷம்

    ஜெய் ஸ்ரீராம் என பாஜக கோஷம்

    இன்று தூத்துக்குடி எம்பியான கனிமொழி கருணாநிதி எம்பியாக பதவியேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், வாழ்க தமிழ் மற்றும் வாழ்க பெரியார் என பதவியேற்ற பின்னர் கூறினார். இதற்கு பதிலடியாக பாஜகஎம்பிக்கள் அப்போது ஜெய்ஸ்ரீராம் , ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

     எம்பிக்கள் பதவியேற்பு

    எம்பிக்கள் பதவியேற்பு

    முன்னதாக தமிழக எம்பிக்கள் அனைவரும் வரிசையாக தமிழிலேயே பதவியேற்றதை பார்த்த பாஜக எம்பிக்கள், பாரத் மாதாகி ஜே என பதில் குரல் எழுப்பினர். இதனால் லோக்சபாவில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இன்று பல்வேறு மாநில எம்பிக்கள் பதவியேற்று வருகிறார்கள். இன்று முழுவதும் இந்த வைபவமே நடைபெற உள்ளது.

    English summary
    Tuticorin dmk mp kanimozhi says vazhka tamil vazhka periyar after take oath mp, but sudden reply from bjp mps, they says jai sriram on lok sabha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X