டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, தூத்துக்குடி தொகுதிக்கான ரயில் திட்டங்கள் குறித்து கோரிக்கைவிடுத்துள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.

தூத்துக்குடி தொகுதியில், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை தோற்கடித்து வெற்றிவாகை சூடியவர் கனிமொழி. லோக்சபாவில் நேரத்தை வேஸ்ட் செய்யாமல், ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்துள்ளார்.

DMK MP Kanimozhi met railway minister Piyush Goyal

நேற்று அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், சிபிஐ விசாரணையில், போலீஸ்காரர்கள் யார் மீதுமே குற்றம் சுமத்தி, முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடவில்லை என்றும் ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில், மறுநாளே, ரயில் திட்டம் தொடர்பாக பியூஷ் கோயலிடம் பேசியுள்ளார். "இன்று ரயில்வே துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களை சந்தித்து தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திய போது" என்று, புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கனிமொழி.

37 திமுக எம்பிக்கள் லோக்சபா சென்று என்ன செய்ய.. என்ன இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தானே.. இவ்வாறெல்லாம் தேர்தல் முடிந்ததும், இணையதளத்தில், ஆளும் கட்சியினர் கிண்டல் செய்தனர். ஆனால், ஆரம்பம் முதலே திமுக எம்பிக்கள் அடித்து ஆட ஆரம்பித்துள்ளனர்.

இந்தி திணிப்பு, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தெல்லாம், தயாநிதி மாறன், நேற்று முன்தினம், லோக்சபாவில் உரையாற்றினார். அடுத்தடுத்து திமுக எம்பிக்கள் அதிரடி தொடருவதால், அக்கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
DMK MP Kanimozhi met railway minister Piyush Goyal, over Tuticorin projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X