India
  • search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸை கழற்றிவிடும் மமதா- திமுக பகிரங்க எதிர்ப்பு- பாஜகவுக்கு சாதகம் என டி.ஆர்.பாலு விமர்சனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் முயற்சி பாரதிய ஜனதா கட்சிக்குதான் (பா.ஜ.க.) சாதகம் என திமுகவின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.

டெல்லி, மும்பைக்கு அண்மையில் சென்றிருந்த மமதா பானர்ஜி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்த போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பதே இப்போது இல்லை என்றார்.

 கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று- நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக அதிகரிப்பு! கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று- நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக அதிகரிப்பு!

அத்துடன் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணி முயற்சி குறித்தும் அவர் விவரித்திருதார். அத்துடன் காங்கிரஸையும் கடுமையாக சாடினார் மமதா. அவரது இந்த போக்கு எதிர்க்கட்சி தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன. தற்போது திமுகவும் மமதாவின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிற

 ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர்

ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர்

இது தொடர்பாக திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஒரு பொதுவேட்பாளரை முன்னிறுத்தும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல் பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடுடன் செயல்பட வேண்டும்.

 மமதா மீது விமர்சனம்

மமதா மீது விமர்சனம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பது இப்போது எங்கே இருக்கிறது என கேட்டிருக்கிறார் மமதா பானர்ஜி. அவர் அறிவார்ந்த அரசியல்வாதி. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்படக் கூடியவர். அவருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் எல்லாம்.. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ சீர்குலைக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான். தனித்தே களம் காண்பது என்கிற மமதா பானர்ஜியின் முயற்சி ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தரப் போவது இல்லை. எதிர்க்கட்சிகளின் பொது எதிரியான பாஜகவுக்குதான் ஒருவகையில் சாதகமாக அமையும். இவ்வாறு டி.ஆர். பாலு கூறினார்.

 திமுக-காங். உறவு

திமுக-காங். உறவு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது, 2-வது அரசுகளில் திமுகவும் 2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பங்கேற்றிருந்தது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தும் பிரசாரம் செய்தார். கடந்த வாரம் டெல்லியில் சோனியா காந்தி வீட்டில் ஆலோசனை கூட்டத்தில் திமுகவும் பங்கேற்றது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் திமுகவும் பங்கேற்று வருகிறது.

 மமதாவுக்கு எதிர்ப்பு

மமதாவுக்கு எதிர்ப்பு

இன்னொரு பக்கம், மாநில உரிமைகள் விவகாரங்களில் மமதா பானர்ஜியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருமித்து குரல் கொடுக்கின்றனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக இருவருமே பல்வேறு பிரச்சனைகளில் ஒரேவித கருத்துகளை தெரிவித்தும் உள்ளனர். இந்த நிலையில் மமதா பானர்ஜியை திமுக விமர்சிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணியை திமுக ஏற்காது என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் டி.ஆர்.பாலுவின் இந்த கருத்துகள் அமைந்திருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Senior DMK leader TR Balu MP has said that Mamata's move to Division in Opposition will help to the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X