டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் ஒன்று சேர்கிறார்களோ?.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்!

திமுக கட்சி அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகளை எப்படி எதிர்கொள்வது என்று பாஜக தலைவர்கள் தீவிரமாக விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: திமுக கட்சி அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகளை எப்படி எதிர்கொள்வது என்று பாஜக தலைவர்கள் தீவிரமாக விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

இந்தியாவில் காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து தீவிரமாக ஒரே நிலைப்பாட்டுடன் இருக்கும் கட்சி என்றால் அது திமுகதான். மூன்று வாரம் முன் மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் மசோதா தாக்கல் செய்து அதை நிறைவேற்றியது.

இது உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்! இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்!

என்ன போராட்டம்

என்ன போராட்டம்

இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள். கடந்த 22ம் தேதி இந்த போராட்டம் நடந்தது. மதிமுக, காங்கிரஸ், திரிணாமுல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் டெல்லியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

அட

அட

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒவ்வொரு பக்கம் சிதறியது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடன் சேராமல் இருந்த மாநில கட்சிகள் எல்லாம் இந்த போராட்டத்தில் மீண்டும் இணைந்தது. திமுகவின் இந்த போராட்டம் அந்த கட்சிகளுக்கு இடையில் பெரிய இணைப்பு பாலம் போல இருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் தலைவர்கள் இடையே இந்த போராட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

எல்லோரும் சென்றனர்

எல்லோரும் சென்றனர்

இந்த நிலையில்தான் காஷ்மீர் நிலைமையை பார்வையிட நேற்று எதிர்கட்சித் தலைவர்கள் குழு ஸ்ரீநகர் சென்றது. காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, கே சி வேணுகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெட்சூரி, திரிணாமுல் தலைவர் தினேஷ் திரிவேதி, திமுக சார்பாக திருச்சி சிவா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தலைவர்கள் காஷ்மீர் சென்றனர்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

ஆனால் இவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோரையும் ராணுவம் நேற்று பாதியில் திருப்பி அனுப்பியது. ஆனால் காஷ்மீர் விஷயத்தில் இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்தது பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

காரணம் திமுக

காரணம் திமுக

இந்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு திமுக நடத்திய போராட்டம்தான் பிள்ளையார் சுழி போட்டது. இதனால்தான் தற்போது போராட்டங்கள் நடக்க தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் கவனம் பெறுவது திமுகவால்தான் என்று பாஜக நினைக்கிறது. திமுக மாநில கட்சிகளை மீண்டும் இணைக்க தொடங்கி உள்ளது என்கிறார்கள்.

அடுத்து என்ன

அடுத்து என்ன

இதனால் திமுகவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும். அடுத்து அவர்கள் எந்த பிரச்னையை கையில் எடுப்பார்கள். டெல்லியில் மீண்டும் போராட்டங்கள் நடத்த வாய்ப்பு உள்ளதாக என்று பாஜக தலைவர்கள் விசாரிக்க தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

English summary
DMK protest on Kashmir issue worried BJP leaders - Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X