டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தடுத்து செக்.. 3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக திமுக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக திமுக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: 3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக திமுக உச்ச நீதிமன்ற படி ஏறி உள்ளது. தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்து வழக்கு தொடுத்துள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. தமிழகம் லோக்சபா தேர்தலில் மட்டும் வாக்களிக்கவில்லை, அதோடு சேர்த்து சட்டசபை இடைத்தேர்தலும் நடந்தது. இடைத்தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது.

 DMK reaches Supreme Court against 3 AIADMK MLA disqualifications

இதனால் அதிமுக அரசு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மீண்டும் தகுதி நீக்க அஸ்திரத்தை கையில் எடுத்து உள்ளது. அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்ய அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது.

திடீர் திருப்பம்.. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்.. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு! திடீர் திருப்பம்.. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்.. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு!

அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் டிடிவி தினகரன் உடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

இதற்கு எதிராக தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி திமுக தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதில் வாக்கெடுப்பு நடக்கும் வரை, சபாநாயகர் எந்த ஒரு எம்எல்ஏவையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக திமுக உச்ச நீதிமன்ற படி ஏறி உள்ளது. தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்து வழக்கு தொடுத்துள்ளது.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கு மீது திங்கள் கிழமை விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

English summary
DMK party reaches Supreme Court against 3 AIADMK MLA disqualifications.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X