டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கல்விக் கொள்கையில் நிறைய தவறுகள் உள்ளன.. திமுக வல்லுநர்கள் அறிக்கை சமர்ப்பிப்பு!

புதிய கல்விக்கொள்கையில் உள்ள தவறுகள் குறித்து மத்திய அரசிடம் திமுக சார்பாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய கல்விக்கொள்கையில் உள்ள தவறுகள் குறித்து மத்திய அரசிடம் திமுக சார்பாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை குறித்த வரைவு அறிக்கை வெளியானதில் இருந்தே நாடு முழுக்க கொதிப்பான நிலை காணப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை காரணமாக, கல்வி ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாகி விடும் என்று பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் புதிய கல்விக்கொள்கையில் உள்ள மொழி கொள்கை மாநில மொழிகளுக்கு முழுக்க முழுக்க எதிரானது என்ற புகாரும் எழுந்துள்ளது. இதை கல்வியாளர்கள் பலர் எதிர்த்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

இந்த புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில்தான் அதிகம் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடிகர் சூர்யா தொடங்கி திமுக எம்பிக்கள் வரை இந்த கல்விக்கொள்கையை எதிர்த்து உள்ளனர். திமுக எம்பிக்கள் எல்லோரும் இதற்கு எதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக மும்மொழி கொள்கைக்கும் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

என்ன குழு

என்ன குழு

அதேபோல் இந்த புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய திமுக சார்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 10 பேர் கொண்ட வல்லுநர் குழுவை திமுக இதற்காக உருவாக்கியது. இந்த புதிய கல்விக்கொள்கையில் இருக்கும் தவறுகள், பிரச்சனைகளை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன குழு

என்ன குழு

அதேபோல் இந்த புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய திமுக சார்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 10 பேர் கொண்ட வல்லுநர் குழுவை திமுக இதற்காக உருவாக்கியது. இந்த புதிய கல்விக்கொள்கையில் இருக்கும் தவறுகள், பிரச்சனைகளை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன அறிக்கை

என்ன அறிக்கை

இந்த வல்லுநர் குழு நேற்று முதல்நாள் திமுகவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையில் உள்ள தவறுகள் குறித்து மத்திய அரசிடம் திமுக சார்பாக இன்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகத்திடம் திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.

என்ன தவறு

என்ன தவறு

அதன்படி இதில் இருக்கும் மொழிக்கொள்கை தவறு, தேர்வு முறைகள் தவறு, பாடத்திட்ட கொள்கைகள் தவறு, வரலாறு ரீதியான பார்வை முழுக்க முழுக்க தவறு. இதனால் ஏழை மாணவர்கள் கல்வி பெற முடியாது. பள்ளியில் இதனால் வழங்கப்படும் மதிய உணவு திட்டம் மொத்தமாக பாதிக்கப்படும் என்று திமுக பல முக்கிய தவறுகளை இதில் சுட்டிக்காட்டியுள்ளது.

English summary
DMK summits its research report on new draft educational policy to the HR Ministry today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X