டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் களமிறங்கி போராட்டம்.. அதிரும் தலைநகர்!

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ

    டெல்லி: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது..

    யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை இரண்டு அவையிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

    இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை. திமுக அதை தற்போது கையில் எடுத்துள்ளது.

    அப்போதே எதிர்ப்பு

    அப்போதே எதிர்ப்பு

    தொடக்கத்தில் இருந்தே இந்த மசோதாவை இரண்டு அவையிலும் திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் மிக கடுமையாக எதிர்த்தது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது.

    இப்போது போராட்டம்

    இப்போது போராட்டம்

    இதில் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் மிக உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    டிஆர் பாலு

    டிஆர் பாலு

    திமுக லோக்சபா தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் இந்த போராட்டம் நடக்கிறது.விசிக தலைவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சீதாராமன் யெச்சூரி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    ஜம்மு-காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், அங்கு உடனே ஒடுக்குமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அங்கு இணைய இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த போராட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

    என்ன பாதுகாப்பு

    என்ன பாதுகாப்பு

    இந்த போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இன்று போராட்டம் செய்யும் நபர்கள் அப்புறப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    English summary
    DMK to protest opposing Kashmir issue today in Delhi with the support of 14 Parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X