டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சோனியா, ராகுலின் எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியது ஏன்? பொங்கிய திமுக.. லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு!

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Parliament Winter Session begins today | தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

    டெல்லி: சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட அவரின் குடும்பத்திற்கு எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் பிரதமர் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்தனர்.

    DMK walks out of Lok Sabha condemning SPG removal from Rahul and Sonia Security

    அதேபோல் பிரதமர் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். பல முக்கிய தலைவர்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பாதுகாப்பு பல தலைவர்களிடம் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன்பின் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

    காத்திருக்கட்டும்.. சிவசேனாவை வேண்டுமென்றே அலைய விடும் சோனியா.. சரத் பவாரிடம் சொன்னது இதுதான்!காத்திருக்கட்டும்.. சிவசேனாவை வேண்டுமென்றே அலைய விடும் சோனியா.. சரத் பவாரிடம் சொன்னது இதுதான்!

    விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த சிறப்பு பாதுகாப்பை விலக்குவதாக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் தற்போது எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்து நீக்கப்பட்டது லோக்சபாவில் எதிரொலித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    DMK walks out of Lok Sabha condemning SPG removal from Rahul and Sonia Security

    சோனியாகாந்திக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டதற்கு எதிராக டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நீண்ட நேரம் பேசினார்கள். மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    English summary
    DMK walks out of Lok Sabha condemning SPG removal from Rahul and Sonia Gandhi Security.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X