டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை

    டெல்லி: அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்பாதீர்கள் என்று மோடி கூறியிருப்பது, அதிமுக-வை கலக்கமடைய செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக - பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில், எம்.பியான ரவீந்தர்நாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. பாஜக கூட்டணி கட்சி எம்.பி-க்கள் குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்தும் பங்கேற்றனர்.

    Do not believe in the unofficial messages On ministerial Post Says Modi

    இன்று மாலை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்பாதீர்கள் என்று புதிய எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கினார். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உரிய இலாகா வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால், அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை

    விஐபி கலாச்சாரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்றும் கூறிய மோடி, ஒவ்வொரு திட்டமும் நாட்டின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்றார்.

    சுதந்திர இந்தியாவில் அதிக பெண் எம்.பி.க்கள் இந்த மக்களவையில் தான் உள்ளனர். பிராந்திய நலன், தேசத்தின் எதிர்பார்ப்பு இரண்டிலும் சமரசம் செய்தது இல்லை என்றும் மோடி பேசினார்.

    English summary
    Modi Said that Do not believe in the unofficial messages On ministerial Post
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X