டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மரத்தைக் கீறினா.. கொட்டுது பாருங்க தண்ணீர்.. ஆஹா இயற்கையின் பெரும் கொடை!.. வைரலாகும் படம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு மரத்தின் பட்டையை கீறினால் அப்படியே தண்ணீர் கொட்டுகிறது. இந்த செய்தி தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை திக் விஜய் சிங் கட்டி என்பவர் வெளியிட்டுள்ளார். காடுகளில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். அதிலும் வெயில் காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி விடும்.

அந்த சுழல்களில் கைக் கொடுப்பதுதான் மரங்கள். முதலை கட்டை மரம் என்ற ஒரு மரத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா. ஆம் இந்த மரத்தின் பட்டைகள் பார்ப்பதற்கு கரடுமுரடாக முதலை தோல் போல் இருக்கும். இந்த மரத்தை அறிவியல் ரீதியில் டெர்மினாலியா எலிப்டிகா என அழைக்கப்படுகிறது.

தேசத்துக்காக என் மகன் உயிரை தியாகம் செய்ததால் பெருமை..ராணுவ அதிகாரி சந்தோஷ்பாபுவின் தாய் உருக்கம்தேசத்துக்காக என் மகன் உயிரை தியாகம் செய்ததால் பெருமை..ராணுவ அதிகாரி சந்தோஷ்பாபுவின் தாய் உருக்கம்

மரவெட்டி

மரவெட்டி

அந்த மரத்தின் பட்டையை மரவெட்டியால் ஓங்கி அடித்தால் அதிலிருந்து தண்ணீர் பிய்த்து கொண்டு கொட்டுகிறது. அந்த தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். மிகவும் வறட்சியான நேரங்களில் இந்த மரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.

கரடுமுரடு

கரடுமுரடு

இந்த மரம் பொதுவாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய இடங்களில் வளரும். இது வறண்ட மற்றும் ஈரப்பதமான ஊசியிலை காடுகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் பட்டைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கும். மேலும் தீத்தடுப்பானாகவும் இருக்கிறது.

படைப்பு

படைப்பு

கோடை காலங்களில் இந்த மரத்தில் உள்ள நீரை வனத்துறை அதிகாரிகள் குடிப்பர். இந்த தண்ணீரை குடித்தால் வயிற்று வலியை குறைக்கும் என்கிறார்கள். இயற்கை எத்தனை அற்புதமான ஒரு படைப்பை கொடுத்துள்ளது. ஆனால் நாம் தாம் அதன் அற்புதங்களை தெரிந்து கொள்ளாமல் மரங்களை வெட்டி காட்டை அழித்து வருகிறோம்.

Recommended Video

    Kid playing cricket shots is trending in twitter.
    இயற்கை

    இயற்கை

    இந்த தண்ணீர் கசிவை எவ்வாறு நிறுத்துவது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது சிறிது காலத்திற்கு அப்படியே இருக்கும். பின்னர் அதுவாகவே இயற்கையாக வறண்டுவிடும். இது சேமிக்கப்பட்ட தண்ணீர் என்று தெரிவித்துள்ளார். இந்த மரத்தின் எந்த முறை மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

    English summary
    Do you know a bark of the tree stores huge water? If u dont know then watch this video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X