டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட் வெறும் 5 ரூபாய்க்கு தொடர்ந்து விற்கப்படுவது எப்படி? சுவாரஸ்ய தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: பார்லே ஜி பிஸ்கெட் ஒரு பாக்கெட் இன்று வரை ரூ 5க்கு எப்படி கொடுக்க முடிகிறது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஸ்கெட்டுகளை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி உண்கிறார்கள். அப்படிப்பட்ட பிஸ்கெட்டுகளின் விலை தொடங்கும் போது என்ன இருந்ததோ அந்த விலையை காட்டிலும் அதிகரித்துவிட்டது.

கடந்த 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பார்லே பிஸ்கட் நிறுவனமானது 32 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதன் தயாரிப்பான பார்லே பிஸ்கெட்டுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதன் விலை ரூ 5 ஆகும்.

அரை லிட்டர் பாக்கெட்.. எடை குறைய இதுதான் காரணம்! எத்தனை பாக்கெட்களில் எடை குறைந்தது! ஆவின் விளக்கம்அரை லிட்டர் பாக்கெட்.. எடை குறைய இதுதான் காரணம்! எத்தனை பாக்கெட்களில் எடை குறைந்தது! ஆவின் விளக்கம்

20 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 3 க்கு விற்கப்பட்ட இந்த பிஸ்கெட் பாக்கெட் 1994 ஆம் ஆண்டு ரூ 4 க்கு விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு முதல் ரூ 1 உயர்ந்து அந்த பிஸ்கெட் பாக்கெட்டின் விலை ரூ 5 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை மக்கள் விரும்பி சாப்பிடும் இந்த பிஸ்கெட்டை பெரும்பாலானோர் தேனீரில் நனைத்து சாப்பிடுகிறார்கள்.

சுவை

சுவை

இதன் சுவையும் நன்றாக இருக்கும். வயிறும் நிரம்பிவிடும். அதிகம் மக்களால் விரும்பி சாப்பிடப்படும் இந்த பார்லே ஜி பிஸ்கெட்டின் விலை இன்னமும் ரூ 5 க்கு விற்கப்பட்டு வருவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம். இதுகுறித்து ஸ்விக்கியில் டிசைன் இயக்குநர் சப்தர்ஷி பிரகாஷ் கூறுகையில் 1994 ஆம் ஆண்டு பார்லே ஜி பிஸ்கெட்டின் விலை ரூ 4 ஆக இருந்தது.

சாத்தியம்

சாத்தியம்

பின்னர் 2021 ஆம் ஆண்டு ரூ 1 உயர்த்தப்பட்டு ரூ 5 க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை எப்படி சாத்தியம்? இதை சாத்தியப்படுத்த பார்லே ஜி உளவியல் ரீதியாக ஒரு விஷயத்தை செய்து சாதிக்கிறது. நான் சிறிய பாக்கெட் என சொன்னவுடன் உங்களுக்கு மனதில் தோன்றுவது என்ன? ஒரு பாக்கெட் பிஸ்கெட் நம் கைகளில் அடக்கமாக பொருந்துவதுதான்.

பார்லே நிறுவனம்

பார்லே நிறுவனம்

நம்மில் பெரும்பாலானோருக்கு இதைத்தான் விரும்புவோம். இதை பார்லே நிறுவனம் தெரிந்து வைத்திருக்கிறது. எனவே பிஸ்கெட் பாக்கெட்டின் விலையை அதிகரிப்பதற்கு பதிலாக பாக்கெட்டின் ஒரு பகுதியின் அளவை குறைத்துவிடுவதால் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். இந்த பிஸ்கெட் முதலில் தொடங்கப்பட்ட போது 100 கிராம் எடை இருந்தது. சில ஆண்டுகள் கழித்து 92.5 கிராமானது. பின்னர் 88 கிராமாக குறைந்தது. இன்றைய நிலவரப்படி 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லே ஜி பாக்கெட்டின் எடை 55 கிராமாகும். கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 45 சதவீதம் குறைந்துள்ளது நல்ல விஷயமாகும். இதுதான் டெக்னிக் என பிரகாஷ் தெரிவித்தார்.

English summary
Do you know how Parle G biscuits still costs only for Rs 5?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X