டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்ரா தாஜ்மஹால் தெரியும்.. அமெரிக்காவில் அட்லாண்டிக் சிட்டியில் டிரம்பின் தாஜ்மஹால் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அனைவருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் அட்லாண்டிக் சிட்டியில் டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஒரு தாஜ்மஹால் இருக்கிறது. அது குறித்து தெரியுமா?

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    டெல்லியில் ஆக்ராவில் தாஜ்மஹால் எனும் காதல் கோட்டை உள்ளது. உலக அதிசயங்களுள் ஒன்றான இந்த தாஜ்மஹால் எழில்கொஞ்சும் யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது.

    இந்த நினைவுச்சின்னம் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டன. இந்த கட்டடத்தை முகலாய மன்னர் ஹாஜஹான் கட்டினார்.

    கட்டடக் கலை

    கட்டடக் கலை

    அவர் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இந்த நினைவுச் சின்னத்தை கட்டினார். மொத்தம் 22 ஆயிரம் பணியாளர்களை கொண்டு 1631 ஆம் ஆண்டு தொடங்கி 1654 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெற்றன. பாரசீக கட்டடக் கலையில் கட்டப்பட்டது. இங்கு 4 மினார்கள் உள்ளன.

    சிறப்புகள்

    சிறப்புகள்

    இந்த கட்டடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த தாஜ்மஹாலை இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பார்வையிடுகிறார்கள்.

    அட்லாண்டிக் சிட்டி

    அட்லாண்டிக் சிட்டி

    இந்த தாஜ்மஹாலை பார்வையிடும் டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அட்லாண்டிக் சிட்டியில் இருந்த டிரம்ப் தாஜ்மஹால் நினைவுக்கு வரும். ஆம் மிகப் பெரிய தொழிலதிபரான டிரம்ப் அமெரிக்காவில் டிரம்ப் கேஸ்டில், டிரம்ப் டவர்ஸ், டிரம்ப் சென்டர் என ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளார். கடந்த 1990 ஆம் ஆண்டு அட்லாண்டிக் சிட்டியில் டிரம்ப் தாஜ்மஹால் என்ற சூதாட்ட விடுதியை தொடங்கினார்.

    மருத்துவக் காப்பீடு

    மருத்துவக் காப்பீடு

    இங்கு 3000 பேர் பணியாற்றினர். இது மொத்தம் 1.67 லட்சம் சதுர அடி கொண்டதாகும். இங்கு 1971 அறைகள் இருந்தன. கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த சூதாட்ட கிளப்பிற்கு சிக்கலும் ஏற்பட்டது. அதாவது அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் சட்டவிரோத பணபரிவர்த்தனையும் நடத்தப்பட்டு அமெரிக்க நீதிமன்றத்தால் 10 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

    தாஜ்மஹால்

    தாஜ்மஹால்

    இதையடுத்து இந்த சூதாட்ட கிளப்பானது அக்டோபர் 10, 2016-இல் மூடப்பட்டது. இதையடுத்து இது புதுப்பிக்கப்பட்டு ஹார்ட் ராக் சிட்டி என்ற பெயரில் ஹோட்டலாக மாற்றப்பட்டது. அமெரிக்காவில் சூதாட்ட கிளப்பிற்கு தாஜ் மஹாலின் பெயரை வைத்த டிரம்பிற்கு இன்று காதல் கோட்டையான ஆக்ரா தாஜ்மஹாலுக்குள் செல்லும் போது இந்த பெயர் எத்தனை காதல் உணர்வு கொண்டது என்பதை அவர் உணருவார் என தெரிகிறது.

    English summary
    All we know about Agra's Tajmahal. Do you know Trump's Tajmahal in Atlantic city?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X