டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிருமிநாசினி சுரங்க பாதைகளால் ஆபத்து.. சுவாசித்தாலே நிமோனியா வரும்.. டாக்டர்கள் வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: கிருமிநாசினி சுரங்கப் பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவர்கள் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வதற்கு கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் எனப்படும் கிருமிநாசினி திரவம் கொண்டு 20 நிமிடங்கள் கை கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் ஆங்காங்கே கிருமிநாசினி திரவமும் தெளிக்கப்படுகின்றன.

உயரமான கட்டடங்களுக்கு ராட்சத கிரேன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்த நிலையில் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக காய்கறி வாங்க மார்க்கெட் பகுதிகளுக்கு வருகிறார்கள்.

 திணறும் தாராவி.. ஆபத்தை விளைவிக்கும் டாய்லெட்டுகள்.. கொரோனாவுக்கு 5 பேர் பலி.. பீதியில் தமிழர்கள் திணறும் தாராவி.. ஆபத்தை விளைவிக்கும் டாய்லெட்டுகள்.. கொரோனாவுக்கு 5 பேர் பலி.. பீதியில் தமிழர்கள்

மார்க்கெட்டுகள்

மார்க்கெட்டுகள்

என்னதான் மைதானங்களில் மார்க்கெட்டுகள் வைக்கப்பட்டாலும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இதனால் கிருமிநாசினி சுரங்கபாதை வைக்கப்பட்டு அதில் 10 வினாடிகளுக்கு கடக்கும் மக்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இது போல் கிருமிநாசினி தெளிப்பதால் பாக்டீரியா, வைரஸ்கள் சாகாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறான எண்ணம்

தவறான எண்ணம்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் என இதுவரை விஞ்ஞான ரீதியிலான நிரூபணம் ஆகவில்லை. கிருமிநாசினியில் கலக்கப்படுவது சோடியம் ஹைப்போகுளோரைட்டு தெளித்தால் கிருமிகள் அண்டாது என மக்கள் மனதில் தவறான எண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிருமிநாசினிகளை தெளிக்குமாறு உலக சுகாதார நிறுவனம், அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியன அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்

இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. கிருமிநாசினிகளில் சோடியம் ஹைப்போகுளோரைட்டு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என WHO சொல்லவில்லை. தரைகளை சுத்தப்படுத்துதல், டேபிள் உள்ளிட்ட பர்னிச்சர்களை சுத்தப்படுத்தவும் ஹைப்போகுளோரைட்டு திரவம் பயன்படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

எனவே இவற்றை வைரஸை கட்டுப்படுத்தவோ அறுவை சிகிச்சை அரங்கங்களிலோ தெளிக்கக் கூடாது. இவற்றை உள்ளங்கைகளில் வைத்து தேய்க்கக் கூடாது. கொரோனா வைரஸானது நுரையீரல் குழாய்களில் தங்கியுள்ளன. எனவே அவை பரவாமலிருக்க மாஸ்க் அணியலாம். மற்றபடி கிருமிநாசினி சுரங்கப்பாதைகள் வேலைக்கு ஆகாது. ஹைட்ரஜன் பெராக்சைடு கண், தோலில் பட்டால் ஒப்பாமையை ஏற்படுத்தும். இந்த திரவம் நமது நுரையீரலில் அதிகம் நுழைந்துவிட்டால் அதுவே நிமோனியா, நுரையீரல் எடீமா, உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும். எனவே புதிய கிருமிநாசினி சுரங்கப்பாதைகளை அமைப்பதை நிறுத்துங்கள். ஏற்கெனவே அமைக்கப்பட்ட கிருமிநாசினி சுரங்கப் பாதைகளை பயன்படுத்தாதீர் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

English summary
Doctors advises to stop installation of tunnels and not use the tunnels which are already installed, as they are harmful for human body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X