டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே 19 முதல் உள்நாட்டு விமான சேவைகளும் இடம்பெயர்ந்தவர்களுக்காக தொடங்கப்படுகிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுனால் சிக்கியிருக்கும் இடம்பெயர்ந்தவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்வதற்காக மே 19-ந் தேதி முதல் ஏர் இந்தியா விமானங்கள் உள்நாட்டு சேவையை தொடங்கலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாக்டவுனால் பிற மாநிலங்களில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மாநில அரசுகளின் ஏற்பாட்டில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பயணிகள் செல்வதற்கான ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

Domestic flights expected to operate from May 19

இந்த நிலையில் உள்நாட்டு விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வரும் 19-ந் தேதி முதல் தொடங்கலாம் என கூறப்படுகிறது. முதல் கட்டமாக பிற மாநிலங்களில் சிக்கியிருப்போரை அழைத்து செல்ல இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளனவாம்.

முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கொச்சியில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் இயக்கப்படும். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதிக்காக ஏர் இந்தியா நிறுவனம் காத்திருக்கிறது.

கொரோனா தாக்குதல் எதிரொலி- வழக்கறிஞர்கள் கவுன், கோட் அணிவதை தவிர்க்க உச்சநீதிமன்றம் அட்வைஸ் கொரோனா தாக்குதல் எதிரொலி- வழக்கறிஞர்கள் கவுன், கோட் அணிவதை தவிர்க்க உச்சநீதிமன்றம் அட்வைஸ்

தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Air India is likely to resume domestic travel from May 19 onwards to help stranded passengers reach their homes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X