டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் யூனியன் பிரதேசமே சட்டவிரோதமாம்... பரூக் அப்துல்லா சொன்னதை போலவே பேசும் சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கிவிட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், லடாக் மற்றும் அருணாசல பிரதேசங்களில் புதிய பாலங்களை திறந்து வைத்தார். நாட்டின் எல்லைப் பகுதிகளில் மொத்தம் 48 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்புகாஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணரவில்லை.. சீனா வரட்டும் என நினைக்கிறார்கள்.. பரூக் அப்துல்லா பரபரப்பு

இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:

லடாக்கை ஏற்க போவதில்லை

லடாக்கை ஏற்க போவதில்லை

இந்தியாவில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது. அருணாசலப் பிரதேசத்தைப் போலவே லடாக் யூனியன் பிரதேசத்தையும் ஏற்க முடியாது.

மோதல் போக்கை ஏற்படுத்தும்

மோதல் போக்கை ஏற்படுத்தும்

எல்லை பகுதிகளில் எந்த ஒரு உள்கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்வதையும் சீனா ஏற்காது. ஒருதரப்பாக எல்லைகளில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் மோதல் போக்கை தீவிரப்படுத்தும். எல்லைகளில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை இந்த நடவடிக்கைகள் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.

பதற்றத்தை உருவாக்க கூடாது

பதற்றத்தை உருவாக்க கூடாது


இப்படியான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, இதன் மூலமாக ராணுவ குவிப்பை அதிகப்படுத்துவதுதான் தற்போதைய பிரச்சனைகளுக்கே மூல காரணமாகும். இருதரப்பும் ஒப்புக் கொண்டதைப் போல எல்லையில் பதற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறினார்.

பரூக் அப்துல்லா- சீனா பேச்சு

பரூக் அப்துல்லா- சீனா பேச்சு

அண்மையில்தான் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய அரசை நீக்கியதை சீனா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால்தான் லடாக் எல்லையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஆதரவுடன் 370-வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மீண்டும் அமலாகும் என கூறியிருந்தார். தற்போது பரூக் அப்துல்லாவின் குரலிலேயே சீனாவும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
China Foreign Ministry spokesperson Zhao Lijian said that China does not recognise the Ladakh Union Territory illegally set up by the Indian side and the Arunachal Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X