டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராணுவ வீரர்களின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது.. கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி!

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை கட்சிகள் பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் 40 நாட்களில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதல் இந்த தேர்தலில் அதிக முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக இப்போதே செல்கிற இடத்தில் எல்லாம் இந்த தாக்குதல் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும், புல்வாமா தாக்குதல் குறித்தும்தான் பேசி வருகிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.. வாழ்ந்து கெட்ட தேமுதிக.. ஒரு பிளாஷ்பேக்! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.. வாழ்ந்து கெட்ட தேமுதிக.. ஒரு பிளாஷ்பேக்!

மோடி போஸ்டர்

மோடி போஸ்டர்

அதேபோல் பிரதமர் மோடியும் அனைத்து பிரச்சாரங்களிலும் இதை குறித்து மட்டுமே பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் மிக மோசமான போஸ்டர் ஒன்றும் ஒட்டப்பட்டு இருந்தது.அதன்படி பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு அருகே இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் புகைப்படம் இருந்தது. அபிநந்தனை மீட்டது பிரதமர் மோடிதான் என்று அதில் எழுதி இருந்தது.

மிக மோசம்

மிக மோசம்

அதில் பிரதமர் மோடி நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது . இந்த போஸ்டர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் தற்போது தலையிட்ட இருக்கிறது.

என்ன அறிக்கை

என்ன அறிக்கை

தேர்தல் ஆணையம் இதுகுறித்த அனைத்து கட்சிகளுக்கும் அறிக்கை அளித்துள்ளது.தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை கட்சிகள் பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான எதையும் பிரச்சாரங்களில் பயன்படுத்தீர்கள் என்று கூறியுள்ளது.

கூடாது

கூடாது

ராணுவம் என்பது நடுநிலையான அமைப்பு. ராணுவத்தை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்த கூடாது. அப்படி அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துவது தவறு. அதனால் ராணுவத்தை பிரச்சாரங்களில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

English summary
Don't use Armed Forces Photos in Political Campaigns says Election Body To Parties in their notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X