டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"காதல் ஓவியம்"..24 இல் தாஜ் மஹாலில் மனைவி மெலானியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் வரும் 24-ஆம் தேதி மனைவி மெலானியுடன் தாஜ் மஹாலை பார்வையிடவுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி மனைவி மெலானியுடன் இந்தியாவுக்கு வரவுள்ளார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் வரவுள்ள அவர் இந்தியாவில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 24 ஆம் தேதி மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்ததும் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கவுள்ளார்.

டிரம்ப்

டிரம்ப்

பின்னர் மோடியும் டிரம்பும் 27 கி.மீ. தொலைவுக்கு சாலை மார்க்கமாக பயணிக்கவுள்ளனர். அங்குள்ள மோட்டாரோ அரங்கத்தை சென்றடைகிறார்கள். இதற்காக இவர்கள் பயணிக்கவுள்ள சாலை விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல், வர்ணம் பூசுதல், சுவர்களில் ஓவியங்கள் வரைதல் என அழகுப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

மெலானி

மெலானி

சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் டிரம்ப் அங்குள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டு அரங்கமான மோட்டாரோ மைதானத்தை திறந்து வைக்கிறார். பின்னர் டெல்லி செல்லும் டிரம்ப் இந்தியாவுடன் வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறார். இதையடுத்து அவர் 24-ஆம் தேதியே தாஜ்மஹாலை மனைவி மெலானியுடன் பார்வையிடுகிறார்.

டிரம்ப்

டிரம்ப்

இதற்காக அசுத்தமான யமுனை ஆற்றில் தண்ணீரை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து இரு நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்த்தால் டிரம்ப் எத்தனை பிரமிப்படைய போகிறாரோ? யமுனை நதிக்கரையில் மனைவியுடன் காதல் கோட்டையை பார்க்கும் டிரம்ப் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்.

Recommended Video

    The Beast: Donald Trump car specifications | இந்தியா வரும் டிரம்ப் காரில் என்ன வசதிகள் இருக்கும் ? dsv
    ஆக்ரா கோஸ்ட் சிட்டி

    ஆக்ரா கோஸ்ட் சிட்டி

    மேலும் மெலானியுடன் அவர் காதல் பாடல்களை முணுமுணுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யமுனை நதியை தூய்மைப்படுத்துவதன் மூலம் நீர் மாசும், காற்று மாசும் சரி செய்யப்படும். கடந்த முறை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியா வந்த போது ஆக்ராவை கோஸ்ட் சிட்டி என விமர்சித்திருந்ததை அடுத்து தற்போது தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    English summary
    American President Donald Trump to visit Tajmahal ahead of his India tour with his wife.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X