டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு தம்பிடி காசுக்கு கூட பிரயோஜனமே கிடையாது ... பொங்குவது சு.சுவாமி

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையால் அந்த நாட்டு பொருளாதாரம்தான் உயருமே தவிர இந்திய பொருளாதார உயர்வுக்கு ஒரு பயனும் இல்லை என்கிறார் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    மத்திய அரசு மீது தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. நாட்டின் பொருளாதார தேக்கநிலையில் வெளிப்படையாகவே மத்திய அரசை விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.

    Donald Trump visit wont benefit to India, says Subramanian Swamy

    அதேபோல் இந்த நூற்றாண்டின் மிக மோசமான செயல் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு எனவும் விமர்சித்திருந்தார். தற்போது அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வருகையையும் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், டிரம்ப்பின் வருகையால் அமெரிக்காவின் பொருளாதாரம்தான் உயரும். நமது நாட்டின் பொருளாதாரம் உயராது. என்னைப் பொறுத்தவரையில் டிரம்ப்பின் வருகையால் எந்த பயனுமே இல்லை என்றார்.

    மேலும், அமெரிக்காவுடன் ஏற்கனவே பல பாதுகாப்பு துறை சார் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதனால் அமெரிக்காவின் பொருளாதாரம்தான் உயரும். அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்களை வாங்க நாம்தான் பணம் கொடுக்கப் போகிறோம். அவர் ஒன்றும் இலவசமாக கொடுக்கப் போவது இல்லை எனவும் கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

    English summary
    BJP Rajya Sabha MP Subramaian Swamy said that US President Donald Trump's visit will not benefit to India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X