டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர் ஸ்பெஷாலிட்டி 2021: இளம்டாக்டர்களை கால்பந்து போல பந்தாடாதீர்.. சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது... சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பங்கேற்கும் இளம்டாக்டர்களை, கால்பந்து போல பந்தாடாதீர்கள் என்று என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கடந்த ஜூலையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிக்கையை வெளியிட்டது..

மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்? மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்?

ஆனால், அந்த அறிக்கை வெளியிட்ட பிறகு, அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கபபடுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

 கடைசி நிமிடம்

கடைசி நிமிடம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு பாடத்திட்டத்தில், திடீரென அதுவும் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.. இதனால் அதிர்ந்து போன மாணவர்கள், தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனிடையே, இதுதொடர்பாக 41 முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த டாக்டர்கள், சுப்ரீம்கோர்ட்டில் நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்தை எதிர்த்து ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர்...

மாற்றம்

மாற்றம்

அந்த மனுவை டிஒய் சந்திரசூட், பிவி நாகரத்னா அமர்வு விசாரித்தது. அப்போது நீட் எஸ்எஸ் பாடத்திட்ட கடைசி நேர மாற்றத்துக்கு கோர்ட் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தது. "அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இளம் டாக்டர்களை கால்பந்து போல மத்திய அரசு உதைத்து விளையாடக் கூடாது... நீட் எஸ்எஸ் பாடத்திட்ட மாற்றத்தை அடுத்த வருடம் அமல்படுத்த முடியாதா?

கேள்வி

கேள்வி

டாக்டர்கள் தேர்வுக்கான தயாரிப்பை தொடங்கிய பிறகு இடையில் பாடத்திட்டத்தை மாற்றியது ஏன்? ஒரு சில மாதங்களே தேர்வுக்கு இருக்கும் நிலையில் மாணவர்கள் இதற்கு எப்படி தயாராவார்கள்? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியது. இதற்கு தேசிய மருத்துவ ஆணையம் "ஆலோசிக்கப்பட்டு வந்த பாடத்திட்ட மாறுதலைதான் அமல்படுத்தி உள்ளோம்" என்று பதிலளித்தது.. ஆனால், இதற்கு நீதிபதிகள் மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்..

கண்டனம்

கண்டனம்

"இந்த தேர்வு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.. பல மாதங்களாகவே இந்த தேர்வுக்கு அவர்கள் தயாராகி வருகிறார்கள்..இளம் மருத்துவர்களின் வாழ்க்கையை பொறுப்பற்ற அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்க கோர்ட் விரும்பவில்லை.. அதனால், இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.. மருத்துவர்கள் சார்பில் பதிலளிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டது.. அத்துடன் இந்த வழக்கை வரும் திங்கட்கிழமைக்கும் ஒத்திவைத்தது.

English summary
Dont treat young doctors like footballs, says Supreme court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X