டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டுக்கு வீடு டீசல் விநியோகம் செய்ய அழைப்பு.. இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: வீடுகளுக்கே சென்று பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த திட்டத்திற்கு இந்தியாவில் வரும் காலத்தில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.

முன்பதிவு அடிப்படையில் வீட்டுக்கே வந்து பெட்ரோல் டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி தற்போது நாட்டின் சில முக்கிய நகரங்களில் பியூயல் பட்டி, ரெப்போஸ் எனர்ஜி, பெப் பியூயல், மை பெட்ரோல் பம்ப் போன்ற நிறுவனங்கள் ஆர்டரின் பேரில் பேரல் பெட்ரோல் சப்ளை செய்து வருகின்றன.

இந்நிலையில் த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற அதிவேக டீசலை வீட்டு வாசலில் வழங்க விரும்பும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளன. விருப்பம் உள்ள நிறுவனங்கள் தங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

பெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வுபெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வு

30,000 தொழில்முனைவோர்

30,000 தொழில்முனைவோர்

இந்த திட்டத்தின் மூலம் குறைந்த முதலீட்டில் பெட்ரோல் பம்ப்கள் அமைக்க முடியும். ₹20 லட்சம் முதல் ₹30 லட்சம் முதலீடு செய்ய வேண்டியதிருக்கும். போதும். சுமார் 30,000 தொழில்முனைவோர் இந்த திட்டத்தில் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. ரூ .9,000 கோடி முதலீட்டிற்கு வழிவகுக்கும் என ரெபோஸ் எனர்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரி சேரன் வாலுஞ்ச், கூறினார். ரெபோஸ் எனர்ஜி ரத்தன் டாடாவின் ஆதரவுடன் செயல்படுத்தி வருகிறது.

வீடுகளுக்கே டெலிவரி

வீடுகளுக்கே டெலிவரி

வீடுகளுக்கே சென்று எரிபொருள் விநியோகம் செய்யும் தொழில் இந்தியாவில் ஒரு முக்கிய சந்தையாக மாற வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். இது எதிர்காலத்தில் டீசலுக்கான தேவையையும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

82.6 மில்லியன்

82.6 மில்லியன்

2019-20 நிதியாண்டில் நாட்டின் மொத்த டீசல் நுகர்வு 82.6 மில்லியன் டன்களாக இருந்தது. ஊரடங்கில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மற்றும் பயன்பாடு வெகுவாக குறைந்த போதிலும் ஊரடங்கு தளர்வால் அதன் நுகர்வு தற்போது அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தான் வீடுகளுக்கே டீசல் சப்ளை செய்யும் திட்டத்தை செயல்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

18 மாதங்களில் செம்ம

18 மாதங்களில் செம்ம

இதனிடையே எரிபொருளை மொபைல் பம்புகள் மூலம் வீடுகளுக்கே விநியோகிக்க போகும் ஸ்டார்ட்-அப்களுக்கு, அடுத்த 12-18 மாதங்களில் குறைந்தது ரூ .2,000 கோடி வருவாய் ஈட்டக்கூடிய திட்டம் நல்ல திட்டம் எனறும் தகவல்கள் வெளியகி உள்ளன.

English summary
door-to-door diesel delivery could spiral into a major market in India soon as oil marketing companies (OMC) in India are planning to engage start-ups for doorstep delivery of the fuel through mobile petrol pumps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X