டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பிய தூர்தர்ஷன்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பிய தூர்தர்ஷன்-வீடியோ

    டெல்லி: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிகள் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் (டிடி) இன்று லைவ்வாக ஒளிபரப்பப்பட்டது.

    பொதுவாக தனியார் அமைப்புகள், இயக்கங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் என அரசு தரப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம்.

    Doordarshan telecasts Live of Foundation Day of RSS

    அண்மையில் சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பங்கேற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யவில்லை என்பது சர்ச்சையானது. இதில் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க நாள், விஜயதசமி நிகழ்ச்சிகள் இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் கட்காரி, விகே சிங் ஆகியோர் பங்கேற்றனர். ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக இதில் பங்கேற்றார்.

    87-வது விமானப் படை தினம்- ஹிண்டனில் கண்கவர் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் #AirForceDay201987-வது விமானப் படை தினம்- ஹிண்டனில் கண்கவர் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் #AirForceDay2019

    இந்நிகழ்ச்சியை தூர்தர்ஷன் லைவ்வாக ஒளிபரப்பியது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பியது.

    English summary
    Doordarshan today Live telecast of Foundation Day of RSS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X