டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 10 மாநிலங்களில் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 10 மாநிலங்களில் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளுக்கும், இந்த மாநிலங்களில் நோய் வேகமாக பரவுவதற்கும் இரட்டை பிறழ்வு வைரஸ்கள் (இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா) காரணமாக இருக்கலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை மாநிலங்களில் இரட்டை பிறழ்வு கொரோனா பாதிப்பு அதிகமாக கண்டுபிடிக்கப்பட்ட மாநிலங்களில் முதன்மையானவை ஆகும்.

மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகையில், கோவிட் -19 கேஸ்கள் விரைவாக அதிகரிப்பதில் இந்த இரட்டை பிறழ்வு கொரோனா வைரஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், உயிரிழப்பு அதிகரிப்பதற்கு இந்த வகை கொரோனாவே 100 சதவீதம் காரணம் என்று கூற முடியாது.

என்ன பாதிப்பு

என்ன பாதிப்பு

எல்லா வைரஸ்களை போலவும், ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் செல்லும் போது, கொரோனா வைரஸும் தொடர்ந்து சிறு, சிறு வகையில் மாறும் இத்தகைய பிறழ்வுகள், பெரும்பாலும் பின்விளைவுகள் இல்லாமலும், பொதுவாக அந்த வைரஸ் செயல்படும் தன்மையில் பெரிய மாற்றத்தை உருவாக்காதவையாகவே இருக்கும். ஆனால் சில பிறழ்வுகளோ, வைரஸ்கள் பொதுவாக எந்த புரதச்சத்தை பிடித்துக்கொண்டு மனித அணுக்களுக்குள் செல்லுமோ அவற்றில் உடனடியாக ஓர் உயர்வை ஏற்படுத்தும். இத்தகைய பிறழ்கள், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், நோயை தீவிரப்படுத்துவதாகவும், தடுப்பு மருந்துகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலும் அமையும்.

புதிய பாதிப்பு

புதிய பாதிப்பு

ஒரு குடும்ப வைரஸின் இரண்டு பிறழ்ந்த வைரஸ் ஒன்றிணைந்து மூன்றாவதாக ஒன்று உருவானால் அது "இரட்டை பிறழ்வு" (இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்) ஆகும். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட E484Q மற்றும் L452R வைரஸ்கள் இணைந்ததன் விளைவால் இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. . L452R வைரஸ் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காணப்படுகிறது. அதேநேரம் E484Q வைரஸ் பூர்வீகமானது. புதிதாக பரவி வரும் இரட்டை பிறழ்வு வைரஸின் முழுமையான மரபியலைப் புரிந்து கொள்வதற்காக அதிகாரிகள் சோதனை செய்தனர். கோவிட் இறப்புகளில் இந்த கொரோனாவின் பங்கு, நோய்த்தொற்றுகளின் தீவிரம், பூர்வாங்க நோய்த்தொற்று, தோய்தொற்றில் இருந்து மீண்வர்களின் நிலை, தடுப்பூசி மூலம் அதன் விளைவுகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஏறக்குறைய 14,0000 மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இரட்டை பிறழ்வுகள் (உருமாறிய கொரோனாக்கள்) உயரும் போக்கு கண்டறியப்பட்டது,

இங்கிலாந்து கொரோனா

இங்கிலாந்து கொரோனா

டெல்லியில் இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் அதிகமாக உள்ளன என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பஞ்சாபில், கோவிட் உள்ள 80 சதவீத மக்களில் இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா காணப்பட்டது. மகாராஷ்டிராவில் சுமார் 60 சதவீத புதிய பாதிப்புகள் இரட்டை பிறர்வுகளாக உள்ளன. ஆனால் டெல்லியோ அல்லது மும்பையோ இரட்டை பிறழ்வு கொரோனா பற்றி எந்த புகாரும் எழுப்பப்பவில்லை.

19 மாநிலங்கள்

19 மாநிலங்கள்

18 முதல் 19 மாநிலங்கள், அல்லது நாட்டில் 70 முதல் 80 மாவட்டங்கள், இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பைப் பதிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசிலிய வகைகளிள் குறைவான மாவட்டங்களில் பாதித்துள்ளன.

எந்த மாநிலத்தில் இரட்டை மரபுபிறழ்ந்தவர்கள் கண்டறியப்பட்டாலும், அந்த தகவல்களை அரசாங்கம் அந்த மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகபாதிப்பு

அதிகபாதிப்பு

கடந்த மாதம், இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு பற்றிய ரிப்போர்ட்களை அரசு குறைத்து மதிப்பிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இரட்டை பிறழ்வு மற்றும் உருமாறிய கொரோனா காரணமாக புதிய கோவிட் -19 கேஸ்கள் இந்தியா இன்று இரண்டு லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 1.4 கோடிக்கு மேல் போய் உள்ளது. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. டெல்லி, மகாராஷ்டீரா, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், உத்தரப்பிரதசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

English summary
Maharashtra, Delhi, West Bengal, Gujarat, Karnataka and Madhya Pradesh are among the states where doubt mutant strains were found, sources said, adding that these mutants are playing a role in the rapid rise in COVID-19 cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X