டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்?

கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 149 ஏர் இந்தியா விமானங்கள் இன்று மிகவும் தாமதமாக புறப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 149 ஏர் இந்தியா விமானங்கள் இன்று மிகவும் தாமதமாக புறப்பட்டது. இன்னும் பல விமானங்கள் இன்று தாமதமாக புறப்படும் என்று கூறப்படுகிறது.

ஏர் - இந்தியா விமானம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமாக இது உள்ளது.

இந்த நிறுவனம் தற்போது பிஎஸ்எஸ் என்ற சாப்ட்வேர் மூலம் தங்களது பயணிகளுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து வருகிறது.

இலங்கையில் தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து! கொழும்பில் சிறப்பு வழிபாடு!இலங்கையில் தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து! கொழும்பில் சிறப்பு வழிபாடு!

என்ன சாப்ட்வேர்

என்ன சாப்ட்வேர்

இந்த பிஎஸ்எஸ் சாப்ட்வேர் என்பது பேஸஞ்சர் சர்விஸ் சிஸ்டம் என்பதாகும். இதன் மூலம்தான் ஒரு பயணியின் செக் - இன் குறித்து சோதிப்பது, ரிஸர்வேஷனை பதிவு செய்து கொள்வது, இருக்கைகளை தேர்வு செய்வது என்று எல்லாம் பணிகளும் நடக்கும். பயணிகள் எப்படி பயணிப்பார்கள் என்பதை இதை வைத்தே தீர்மானிக்கிறார்கள்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்த நிலையில் இதில்தான் நேற்று மாலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் நேற்று மாலையில் இருந்தே ஏர் இந்தியா விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 149 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எப்படி தாமதம்

எப்படி தாமதம்

தற்போது பணியாளர்கள் இந்த சாப்ட்வேர் செய்யும் பணிகளை கணினியின் உதவி இல்லாமல் சுயமாக செய்கிறார்கள். இதனால் இந்த காலதாமதம் ஏற்படுகிறது. எல்லா விமானமும் சுமார் 3-4 மணி நேரம் தாமதமாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கஷ்டம்

மக்கள் கஷ்டம்

இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்றும் விமானம் தாமதமாக செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாத காரணத்தால் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

English summary
Due to a small technical glitch, 149 Air India flights went late today for more than three hrs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X