டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது மோசமான அறிகுறி.. டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. புவியியல் வல்லுநர்கள் வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. வல்லுநர்கள் எச்சரிக்கை

    டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்றுதான் டெல்லியில் 3.2 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . ஹரியானா அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    நேற்று மட்டும் டெல்லியில் இப்படி நிலநடுக்கம் ஏற்படவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக டெல்லியில் இப்படித்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் மூன்று முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    வேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கைவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை

    தொடர் நடுக்கம்

    தொடர் நடுக்கம்

    ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 12 முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய நிலநடுக்கத்திற்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதற்கான அறிகுறியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இது தொடர்பாக வாதியா புவியியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் (Wadia Institute of Himalayan Geology) நிறுவனத்தின் தலைவர் டாக்டர் காலச்சந்த் சைன் பேட்டி அளித்துள்ளார். அதில் இப்படி சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஆபத்தானது. டெல்லியில் தொடர் அதிர்வுகள் புவி அடுக்கில் ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் பெரிதாக மாறும். இதனால் டெல்லியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, என்று கூறியுள்ளார்.

    பெரிதாக வரும்

    பெரிதாக வரும்

    அதேபோல் பூகம்ப ஆபத்து மதிப்பீட்டு மையத்தின் முன்னாள் தலைவர் ஏ கே சுக்லா அளித்த பேட்டியில், டெல்லியில் அதிகமாக பூகம்பங்கள் ஏற்படுகிறது. இதன் ரிக்டர் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் இது நல்ல செய்தி இல்லை. பொதுவாக ஒரு இடத்தில் பெரிய நிலநடுக்கம் வரும் என்றால் அதற்கு முன் சிறிய நிலநடுக்கம் பல வர வாய்ப்புள்ளது. அதுதான் இப்போது நடக்கிறது என்று கூறியுள்ளார்.

    எவ்வளவு பலம்

    எவ்வளவு பலம்

    இதே கருத்தை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் சந்தன் கோஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார். 6- 6.5 ரிக்டர் அளவு வரை டெல்லியில் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால இந்த நிலநடுக்கம் எப்போது தாக்கும், எந்த பகுதியில் எல்லாம் தாக்கும் என்று விவரங்கள் வெளியாகவில்லை. டெல்லியில் இதனால் முறையின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிக சேதம் அடைய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

    விதிகளை பின்பற்றவில்லை

    விதிகளை பின்பற்றவில்லை

    டெல்லியில் கட்டிடங்கள் எதுவும் பெரிதாக விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை. பல அடக்குமாடி கட்டிடங்களில் முறையாக விதிகள் பின்பற்றப்படவில்லை. இதனால் என்ணெவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. அரசு இப்போதே இதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும். துரிதமாக அரசு செயல்பட்டு சேதங்களுக்கு எதிராக முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    Due to smaller vibrations, A major earthquake may hit soon in Delhi says, Geologists research.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X