டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்

Google Oneindia Tamil News

Recommended Video

    E-cigarettes Vapes e-Hookah banned

    டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இ சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பேசியதற்காக பயோகான் பர்மஸி நிறுவனர் கிரண் மஜூம்தர் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே டுவிட்டரில் கருத்து பரிமாற்றம் நடந்தது.

    டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய அமைச்சர்வையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவித்தனர்.

    அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இ சிகரெட்டுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாகவும் இந்த தடை உடனே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
    சிறுவர்கள் இ சிகரெட் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை தடுக்கவே இ சிகரெட்டுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதராமன் தெரிவித்தார். மேலும் இ சிகெரட் விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதாஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா

    பயோகான் பார்மஸி நிறுவனர்

    இந்நிலையில் ஆசியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மஜூம்தர் ஷாவ், நிர்மலா சீதாராமனின் பேட்டி செய்தியை டுவிட்டரில் வெளியிட்டு அதற்கு மேல் தனது கருத்தை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், இ சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார். இது சுகாதாரத்துறை அமைச்சகத்திலிருந்து அல்லவா இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டும். குட்காவையும் எப்படி தடை செய்யப்போறீங்க? பொருளாதாரத்தை புதுப்பிக்க எப்படி நிதி நடவடிக்கைகளை அறிவிக்க போறீங்க?" என கேட்டு இருந்தார்.

    அதனால் நான் பங்கேற்றேன்

    இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், " கிரண் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தோம். என் தலைமையில் நடந்த கேபினட் அமைச்சரவை கூட்டம் என்ற அடிப்படையில் தான் நான் இ சிகரெட் தடை குறித்து நான் பேச ஆரம்பித்தேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சர்வதேச நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வெளிநாடு சென்று இருந்தார். கேபினட் அமைச்சரான மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேபினட் முடிவுகள் குறித்து தேவைப்பட்டதால் பேசினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பங்கேற்று இருந்தார். அரசாங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நெறிமுறைகளின் படிதான் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பேசிவருகிறேன்

    நீங்கள் என்னை கவனித்திருக்கலாம் நிதியமைச்சராக பொருளாதாரம் குறித்து விஷயங்களில் நான் நடவடிக்கை எடுத்து பணியாற்றி வருகிறேன். பொருளாதார நடவடிக்கை குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன்" என கூறியிருந்தார்.

    நன்றி சொன்ன கிரண்

    இதற்கு பதில் அளித்த கிரண் மஜூம்தர் ஷாவ், நான் இப்போது புரிந்து கொண்டேன். திருத்திக்கொண்டேன். எனது குழப்பங்களுக்கு பதில் அளித்த உங்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

    English summary
    A Twitter Exchange Between Nirmala Sitharaman And Kiran Mazumdar Shaw over e-cigarettes ban
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X