டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் இ சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை.. நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.!| E cigarettes Banned

    டெல்லி: நாடு முழுவதும் இ சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "மாணவர்கள் மத்தியில் இ- சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இ சிகரெட்டுகள் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    E-cigarettes To Be Banned In India: Announces Finance Minister Nirmala Sitharaman

    இதன்படி இனி இ சிகரெட் உற்பத்தி செய்யவோ, ஏற்றுமதி செய்யவோ, அல்லது சேமிக்கவோ, விற்பனை செய்யவோ, விளம்பரம் செய்யவோ கூடாது. இவை அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் 400 வகையான இ சிகரெட் பிராண்டுகள் உள்ளன. இந்த 400 வகை பிராண்டுகளில் 150 வகை பிராண்டுகள் பல்வேறு பிளேவர்களில் வருகின்றன. ஒட்டுமொத்தமாக 400 வகையான இ சிகரெட் பிராண்டுகளுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது " என்றார்.

    இந்தி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து: ப.சிதம்பரம் காட்டம்இந்தி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து: ப.சிதம்பரம் காட்டம்

    இ சிகரட்டுக்கு தடை விதித்த மத்திய அரசு, இதேபோல் மக்களின் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சிகரெட்டுகளுக்கும் தடை விதித்தால் சிறப்பாக இருக்கும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman: The Union Cabinet has given approval to ban e-cigarettes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X