அருணாசலப் பிரதேசத்தில் அதிகாலையில் மிதமான பூமி அதிர்வு- இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நில நடுக்கம்
டெல்லி: அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல் இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 1.33 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இது ரிக்டரில் 3.4 அலகுகள்தான் பதிவாகி இருந்தன. இதனால் பெரிய அளவிலான சேதங்கல் ஏதும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து 2-வதாக இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 அலகுகளாக பதிவாகி இருந்தது. 3-வதாக சிங்கப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டரில் 6.1 அலகாக பதிவானது. இந்திய நேரப்படி காலை 4.24 மணிக்கு சிங்கப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.