டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: சபரிமலை விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து சட்டசபையில் இருந்த முதல்வர் படம் அகற்றப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையமும் கடும் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

மக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்விமக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்வி

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடத்தை விதிகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கேரள மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா கூறுகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டிவிடுவது அல்லது மதத்தின் பெயரால் ஓட்டு சேகரிப்பது போன்றதை தேர்தல் நடத்தை விதிகளுக்கு அப்பாற்பட்டது ஆகும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சபரிமலை ஐயப்பன் பெயரால் மத பிரசாரத்தில் ஈடுபடுவதும் தெளிவான விதிமீறலாகும். எனவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புண்டு

தொடர்புண்டு

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. மத ரீதியிலான மரபுகளில் தலையிடும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொடர்புண்டு என பாஜக குறை கூறி வந்தது.

தடை விதிப்பு

தடை விதிப்பு

பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை பாஜக தடுப்பதாக அக்கட்சியும் மாறி மாறி குறை கூறி வந்தன. இந்த பிரச்சினைகள் சற்று ஓய்ந்துள்ள நிலையில் சபரிமலை விவகாரத்தை நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகள் பயன்படுத்தலாம் என்பதால் அதற்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். அது போல் ராணுவ வீரர்களின் படங்களையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Election Commission bans to use Sabarimala issue in Lok sabha election Propaganda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X