டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ரத்து அறிவிப்பு வேலூரில் மட்டுமா மற்ற தொகுதிகளுக்குமா ?

    டெல்லி: வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    வேலூரில் கடந்த மாதம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகனும் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்தின் பள்ளி, கல்லூரியிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    அது போல் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டிலும் ரூ 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூரில் தேர்தலை நிறுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிராக ஏசி சண்முகம் அவசர வழக்கு.. இன்று காலை விசாரணை வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிராக ஏசி சண்முகம் அவசர வழக்கு.. இன்று காலை விசாரணை

    விளக்கம்

    விளக்கம்

    இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறுகையில் வேலூரில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால் வேலூரில் சில வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

    பரிந்துரை

    பரிந்துரை

    இந்த சூழலில் வேலூரில் லோக்சபா தேர்தலை நடத்த அனுமதித்தால் அது சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கான சூழலை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324 பிரிவு 21-இன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வேலூரில் தேர்தலை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தோம்.

    ரத்து செய்தோம்

    ரத்து செய்தோம்

    அதை ஏற்று வேலூரில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ரத்து செய்துள்ளார். இதன் மூலம் மக்களவை தேர்தலை ரத்து செய்துள்ளோம்.

    விளக்கம்

    விளக்கம்

    மேலும் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கை பட்டியலில் இருந்து வேலூர் லோக்சபா தொகுதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    Election Commission explains that if Vellore election will be conducted then it cannot be done in fair way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X